ரூ.3 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கம்: சவுதி மன்னர் திறந்து வைத்தார் - Sri Lanka Muslim

ரூ.3 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கம்: சவுதி மன்னர் திறந்து வைத்தார்

Contributors

-ஜெட்டா-

சவுதி தலைநகர் ரியாத்தில் சுமார் 507 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் 3 ஆயிரத்து 42 கோடி ரூபாய்) செலவில் கட்டப்பட்ட அதிநவீன விளையாட்டு அரங்கத்தை சவுதி மன்னர் அப்துல்லா திறந்து வைத்தார்.

 
பல்வேறு விளையாட்டுகள் தொடர்பான பயிற்சி மையங்களுடன் அமைந்துள்ள இந்த அரங்கத்தில் ஒரே நேரத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அமர்ந்து போட்டிகளை கண்டுகளிக்கலாம்.

 

நேற்று நடைபெற்ற திறப்பு விழாவின் போது வண்ணமயமான லேசர் ஜாலக் காட்சிகள் நிகழ்த்தப்பட்டன. ஒளி உமிழும் கால்பந்துடன் அந்தரத்தில் பறந்து சாகசம் காட்டிய சிறுவன், அந்த கால்பந்தை மன்னர் அப்துல்லாவிடம் வழங்கி வாழ்த்து பெற்றான்.

 

இந்த புதிய அரங்கின் முதல் போட்டியாக மன்னர் அப்துல்லாவின் பெயரில் ஜெட்டா-ரியாத் அணிகள் மோதும் அப்துல்லா கோப்பை கால்பந்து போட்டி விரைவில் நடைபெற உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team