றஹ்மானியா மத்ரஸா மாணவர்களுக்கு பாராட்டு!

Read Time:1 Minute, 27 Second

குர்ஆன் அபிவிருத்திச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட குர்ஆன் போட்டிப் பரீட்சையில், பாலமுனை றஹ்மானியா குர்ஆன் மதரஸாவிலிருந்து தோற்றி, சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் கெளரவம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (18) இடம்பெற்றது.

பாலமுனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று மாணவர்களுக்கான கெளரவத்தினையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.பீ.எம்.றசீம், ஏ.எல்.எம்.அன்சார், முஹம்மட் சியாத், முன்னாள் காத்தான்குடி பிரதேச கல்வி அதிகாரி எம்.ஏ.சி.எம் பதுர்தீன், முன்னாள் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் முஹம்மட் அதிபர்கள், உலமாக்கள், பள்ளி நிர்வாகிகள்மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Previous post பாராளுமன்ற பார்வையாளர் கூடம் இன்று முதல் திறப்பு!
Next post UNHRC – இலங்கை மீதான தீர்மானத்தின் நகல்வடிவம் அவசியமற்றது; இலங்கை கடுமையாக எதிர்க்கும் – அலிசப்ரி!