லல்லு பிரசாத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? - Sri Lanka Muslim

லல்லு பிரசாத்திற்கு ஜாமீன் கிடைக்குமா?

Contributors

மாட்டுத் தீவன வழக்கில் கைது செய்யப்பட்ட லல்லு பிரசாத் யாதவ்வின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் பீகார் மாநில முதல் மந்திரியுமான லாலுபிரசாத்திற்கு, கால்நடை தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவர் ஜார்கண்ட் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிபதி ஆர்.ஆர்.பிரசாத் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் லாலுபிரசாத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனவே மாட்டுத்தீவன வழக்கில் கைதான லல்லு பிரசாத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது இன்று நடைபெறவுள்ள விசாரணையில் தெரியவரும்

Web Design by Srilanka Muslims Web Team