லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்காது - அரசாங்கம் அறிவிப்பு! - Sri Lanka Muslim

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்காது – அரசாங்கம் அறிவிப்பு!

Contributors

லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்கவில்லை எனவும்  இதனால், இன்றிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட சிலிண்டரின் விலை முன்னைய தொகையில் இருக்கும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 5,175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த விலை அதிகரிப்பானது இன்று (22) நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளது எனவும் லிட்ரோ நிறுவனம் இன்று (22) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team