லிட்ரோ கேஸ் விலை திடீர் அதிகரிப்பு? - Sri Lanka Muslim
Contributors

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 5ஆம் திகதி இந்த விலை திருத்தம் ஏற்படலாம் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு விலை சூத்திரத்திற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 முதல் 800 ரூபா வரை அதிகரிக்கவுள்ளது.

எப்படியிருப்பினும் லிட்ரோ நிறுவனம் இதன் விலையை 350 முதல் 400 ரூபாவினால் மாத்திரம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் போர் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்து வருவதே எரிவாயு விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

Web Design by Srilanka Muslims Web Team