கல்குடா மஜ்லிஸ் ஷுரா சபை அறிக்கை - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 

அனா-

 

கடந்த 25.04.2015ம் திகதி  பத்திரிகையில் வெளியான வாகரை பொது அமைப்புகளின் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட வாகரை பிரதேசத்தில் ஓட்டமாவடி பிரதேச மக்களால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பு மற்றும் காடழிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனும் அடிப்படையில் வெளியிடப்பட்ட உண்மைக்குப் புறம்பான செய்தியின் யதார்த்த நிலையை தெளிவுபடுத்த கல்குடா மஜ்லிஸ் ஷுரா சபையினால் இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது.

 

மேற்படி செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஓட்டமாவடி பிரதேச மக்களால் வாகரை பிரதேசத்தில் நில அபகரிப்போ அல்லது காடழிப்பு அல்லது சட்ட விரோதமான காணிகள் பிடித்தலிலோ ஈடுபட வில்லை என்பதை வாகரை பிரதேச செயளாலர், கிராமசேவகர்கள், காணி உத்தியோகத்தர் தெளிவாக அறிந்திருக்கின்றனர் என்பதை கல்குடா பிரதேச முஸ்லீம்மக்களின் சார்பாக கல்குடா மஜ்லிஸ் ஷுரா சபை தெரிவித்துக்கொள்வதுடன் இவ்விடயம் தொடர்பான உண்மை நிலையையும்; தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

 

வாகரை பிரதேசத்தில் 1977ம் ஆண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த கே.டபள்யூ. தேவநாயகம் அவர்களால் முஸ்லீம்களின் குடியேற்றத்துக்காக உருவாக்கப்பட்ட கிராமம் மதுரங்கேணிகுளம் ஆகும் இப்பகுதியில் சுமார் 150க்கு மேற்பட்ட முஸ்லீம் குடும்பங்கள் வாழ்ந்ததுடன் அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை, முஸ்லீம் கலாச்சார அமைச்சில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல், கிராம அபிவிருத்திச்சங்கம் போன்ற நிருவனங்களும் காணப்பட்டன. இக்கிராமம் உருவாக்;கப்பட்டபோது அங்குவாழும் மக்களின் ஜீவனொபாயத்திற்காக மதுரங்கேணிக்குளம் , குஞ்ங்குளம், கிருமிச்சை மற்றும் அதனை அன்டிய பலபகுதிகளிலும் விவசாய காணிகள் வழங்கப்பட்டிருந்தது. (இவற்றுக்கான ஆவன சான்றுகள் இன்றும் உள்ளது.)

 

அத்துடன் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை, வெள்ளாமைச்சேனை, காணிக்கைவேப்பை, கேணிமடு, பாலையடிஓடை போன்றபகுதிகளில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக முஸ்லீம்களால் பூர்வீகமாக விவசாயம் ,மற்றும் மேட்டுப் பயிர்;, கால்நடை வளர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதை அங்கு பூர்வீகமாக வசிக்கும் தமிழ்மக்களும் மனச்சாட்சியுள்ள அதிகாரிகளான வாகரைபிரதேச செயளாலர், கிராமசேவகர்கள், காணிஉத்தியோகத்தர் ஆவனதரவுகளின் வாயிலாக தெளிவாக அறிந்திருக்கின்றனர்.

 

அதேபோன்று வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாங்கேணி, பனிச்சங்கேணி பகுதிகளிலும் முஸ்லீம்கள் நீண்டகாலமாக வியாபார தொடர்புகளை கொண்டிருக்கின்றனர்.

 

எனவே வாகரை பொது அமைப்புகளின் ஒன்றியம் தெரிவிப்பதைப் போன்று அல்லாது வாகரை பிரதேசம் தமிழ் பேசும் மக்களாகிய தமிழ் மற்றும்  முஸ்லீம் மக்களின் பூர்வீக தொடர்புள்ள பிரதேசமாகும்.

 

 
1983ம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக வாகரை பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் கடத்தப்பட்டும், கொலை செய்யப்பட்டும், விரட்டியடிக்கப்பட்டும் இனச்சுத்தீகரிப்பு செய்யப் பட்டனர். இதன் பின்னர் பலதடவைகள் 1989, 1996, 2002, போன்ற காலங்களில் அவ்வப்போது ஏற்பட்ட சமாதான சூழல் நிலையில் வாகரை பிரதேசத்திலுள்ள தமது சொந்த இடங்களில் முஸ்லீம்கள் மீள்குடியேற முயற்சித்தபோதும் அது திட்டமிட்டு தடுக்கப்பட்டது.

 

2006ம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தம் நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட சாதகமான சூழ்நிலையில் பயங்கரவாத காலத்தில் தமது காணிகளை இழந்த மக்கள் அவற்றை மீளப் பெற்றக்கொள்ள முடியும் என அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவுருத்தலுக்கமைய வாகரைப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியேற சென்ற போது முஸ்லீம்கள் வாழ்ந்த இடங்களில்; தமிழ்மக்கள் குடியேற்றப்பபட்டுள்ளதுடன பாடசாலை, பள்ளிவாசல், கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற நிருவனங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.

 

அதேவேளை பலமுயற்சிகளுக்குப் பின்னர் மதுரங்கேணிக்குளம், குஞ்சங்குளம், கிருமிச்சை பாலையடியோடை போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லீம்களின் நெற்காணிகள் மாத்திரம் வழங்கப்பட்டு அவற்றில் விவசாயம் செய்து வருகின்றனர். 

 

அதேபோன்று காயங்கேணி, மாங்கேணி, பனிச்சங்கேணி பகுதிகளில் வர்த்தகம் செய்த முஸ்லீம்கள் தமது ஆவனங்களை சமர்ப்பித்து தமது காணிகளை மீள பெற்று வியாபார தொடர்புகளை மேற்கொண்டுள்ளனர்.

 

காரமுனை, வெள்ளாமைச்சேனை பகுதிகளில்  பூர்வீகமாக விவசாயம், மற்றும் மேட்டுப் பயிர்செய்கை, கால்நடை வளர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த மக்கள் கடந்த 30 வருடங்களாக தமது நிலங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாமையால் அவற்றை தற்போது துப்பரவு செய்து தமது வாழ்வாதாரத்திற்கான விவசாயம், மேட்டுப்பயிர் செய்கை, கால்நடைவளர்ப்பு செயற்பாடுகளை மேற் கொள்கின்றனர். இவ்விடயத்தை ஒரு மனிதாபிமானரீதியில் அனுகாமல் ஓட்டமாவடி பிரதேச மக்களால் வாகரை பகுதியில் நில அபகரிப்பு மற்றும் காடழிப்பு மேற்கொள்வதாக பொய்யான செய்தியை பரப்பியுள்ளதுடன். இதற்கு பின்புலமாக பிரதேச அரசியல்வாதியொருவர் உள்ளதாகவும் பரப்பப்பட்டுள்ளது. இதன் நிமிர்த்தம் சாதாரண தமிழ் மக்கள் இன உணர்வு ரீதியாக தூண்டப்படுகின்றனர்.

 

எனவே மேற்படி யதார்த்த நிலைக்கு முரணான செய்திகளை பரப்பி தற்போது மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களாகிய தமிழ், முஸ்லீம் மக்களுக்கிடையில்  ஏற்பட்டுள்ள நல்லுரவை மீண்டும் இன முருகளுக்கு தூபமிடும் சுயநலவாதிகளின் பொய்யான செய்திகளில் தெளிவுகானுமாறும் கல்குடா மஜ்லிஸ் ஷுரா சபைதமிழ் மக்களிடம் அன்பாக வேண்டுவதுடன் இது விடயமாக தமிழ் சிவில் சமுகத்துடனும், அரசியல் தலைமைகளுடனும், கல்விமான்களுடனும் ஒரு திறந்த கலந்துரையாடலுக்கு வாய்ப்பை தருமாறு கல்குடா மஜ்லிஸ் ஷுரா சபை வேண்டிக் கொள்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team