வக்பு சபை பௌத்தசாசன அமைச்சுக்கு கடிதம்

Read Time:2 Minute, 30 Second

எம்.அம்ஹர்: மாத்தறை – இஸ்ஸத்தீன்   நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதை உடனடியாக மூடிவிடுமாறு பௌத்தசாசன அமைச்சின் புனித பூமி பிரிவு  வக்பு சபைக்கு உத்தரவிடும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது .

இது தொடர்பாக வக்பு சபை குறித்த மஸ்ஜித்  விவகாரம் தொடர்பாக கவனம் செலுத்துவதாக கடிதம் ஒன்றை பௌத்தசாசன அமைச்சுக்கு அனுப்பியுள்ளதாக நாம் பெற்றுக்கொண்ட தகவல்கள் தெரிவித்தன .

மாத்தறை – இஸ்ஸத்தீன்   நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதை உடனடியாக மூடிவிடுமாறு  பௌத்தசாசன அமைச்சின் புனித பூமி பிரிவின் பணிப்பாளர் திசாநாயக்கா வக்பு சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

பல ஆண்டுகளாக இயங்கி வரும் குறித்த மஸ்ஜித்  வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படும் அதேவேளை குறித்த மஸ்ஜித்துக்கான காணியும் பிரதேசத்தின் பெளத்த விகாரையில் முன்னர் இருந்த தேரர் ஒருவரினால் அன்பளிப்பு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப் படுகின்றது.  ஆனால் தற்போது அந்த பகுதி விகாரைக்கு புதிதாக வந்துள்ள தேரர் குறித்த மஸ்ஜிதை மூடுமாறு அச்சுறுத்தல்  விடுதுள்ளதாக தெரியவருகிறது .

வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக  இயங்கிவரும் குறித்த மஸ்ஜித் பிரதேசத்தின் சமாதானத்திற்கு பாதிப்பு  ஏற்படுத்துவதாக தெரிவித்தே  மூடும்  உத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது .

அதேவேளை சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட மஸ்ஜித் ஒன்றை மூடிவிட உத்தரவிடும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்றும்  நீதிமன்றமே அந்த முடிவை எடுக்க முடியும் என்று சட்டத் தரணிகள் தெரிவிக்கின்றனர் .lm

Previous post முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை தடுக்க முற்படுவதில் என்ன நியாயம் இருக்கின்றது!
Next post மெக்ரேவின் வருகைக்கு விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்!