வடகிழக்கு முஸ்லிம்களின் பிரச்சனைகள் சம்பந்தமாக தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு என்ன? பேரவையின் இணைத்தலைவர் விளக்கம் (video) » Sri Lanka Muslim

வடகிழக்கு முஸ்லிம்களின் பிரச்சனைகள் சம்பந்தமாக தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு என்ன? பேரவையின் இணைத்தலைவர் விளக்கம் (video)

tami66

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

வீடியோ  – தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வசந்தராஜாவின் கருத்துக்கள்:- 

அறுபது வருட காலமாக வடகிழக்கில் வாழுகின்ற சிறுபான்மை இனமான தமிழ் சமூகத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நீண்டு கொண்டே போவதனை ஒரு முடிவிற்கு கொண்டு வர வேaண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழ் அரசியல் தலைமகளும், அவர்களை பிரதி நிதித்துப்படுத்துகின்ற சிவில் அமைப்புக்களினதும் காலத்தின் கட்டாய தேவையாக இருந்து வருகின்றது.

இந்த நிலையிலே இந்த நாட்டில் கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான கடும்போக்கினை எதிர்த்த ஒட்டுமொத்த சிறுபான்மை கட்சிகளும் அரசியல் தலைமைகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையினை பலப்படுத்தி இந்த நாட்டிலே சிறுபான்மை சமூகமான தமிழ் சமூகம் சுய கெளரவத்துடனும், சுய உரிமைகளை பெற்று, பாதுகாப்புடன் தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற நோக்கிலேயே நல்லாட்சி எனும் அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் சிறுபான்மை சமூகத்தின் அபிலாசைகளுடன் நல்லாட்சியினை ஏற்படுத்துவதற்கு காரணமாய் செயற்பட்ட தமிழ் அரசு கட்சியுடன் பங்காளி கட்சிகளாக ஒன்றினைந்து செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினால் குறிப்பிட்டு கூறுமளவிற்கு எதனையும் தமிழ் சமூகத்திற்கு பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்பதே படித்த தமிழ் சமூகத்தினதும், புலம் பெயர் தமிழ் சமூகத்தினதும் அதிகப்படியான பேசு பொருளாக காணப்படுகின்றது.

அதன் அடிப்படையிலே அரசியலில் நேரடி பங்கு பற்றுதல் இல்லா விட்டாலும் தமிழ் அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கின்ற சக்தியாகவும், அறுபது வட காலமாக தமிழ் மக்களால் முன்மொழியப்படுகின்ற கோரிக்கைகளை சர்வதேச மயப்படுத்தி அதற்கான நிரந்தர தீர்வுகளை சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் நீதியான முறையில் புலம் பெயர் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழ் சமூகத்திற்கு பெற்றுகொடுக்க வேண்டிய விடயங்களை படித்த தமிழ் சமூகத்தினதும், புத்திஜீவிகளினதும் பெரும் ஆதரவினை பெற்றுள்ளதுடன் தமிழ் சமூகத்தில் தூய அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கோடு இயங்கும் புதிய அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை செயற்பட்டு வருகின்றது.

அந்த வகையிலே கட சில மாதங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருக்கின்ற முன்னாள் உயர் நீதியரசர் விக்னேஸ்வரனின் பூரண ஆதரவுடன் வடக்கின் யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் எனும் தமிழ் சமூகத்தினை அரசியல் விழிர்ப்புணர்ச்சியின்பால் ஒன்றினைக்கும் நிகழ்வினை நடாத்தி அதற்காக 25000கும் அதிகமான தமிழ் மக்களை திரட்டி தங்களினுடைய தமிழ் மக்கள் பேரவைக்கும் இருக்கும் ஆதரவினை வெளிக்காட்டியிருந்தது.

அதே போலவே கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்மாதம் 21ம் திகதி சனிக்கிழமை எழுக தமிழ் நிகழ்ச்சியினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் கிழக்கு தமிழ் சமூகத்தில் அரசியல் மறுமலர்ச்சியினை ஏற்படுத்துடன், தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான நிகழ்ச்சி நிரழாகவும் தமிழ் மக்கள் பேரவையினால் மட்டக்களப்பில் எழுக தமிழ் நடாத்தப்படவுள்ளதாக பேரவையின் இணைத்தலைவராகவும் நீண்ட காலமாக செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு பிராதியத்திற்கான தவிசாளராக கடமையாற்றி வரும் வசந்தராஜா தெரிவிக்கின்றார்.

தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வினூடாக அரசுக்கும் சர்வதேசத்துக்கும் வடகிழக்கு மக்கள் பின்வருவனவற்றை அழுத்திக் கூற முற்படுகின்றனர் என பேரவையானது பதினொரு அம்சங்களை தங்களது எழுக தமிழ் நிகழ்ச்சி நிரழின் மூலமாக முன்வைக்கின்றது. அவைகள் பின்வருமாறு.

1. வடக்கும் கிழக்கும் இணைக்கப்படல் வேண்டும்.
2. தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளக்கூடிய சமஷ்டி முறையிலான தீர்வு வேண்டும்;.
3. வடகிழக்கிலே திட்டமிட்ட குடியேற்றங்களும் பௌத்தமயமாக்கலும் நிறுத்தப்படல் வேண்டும்.
4. போர்க்குற்ற விசாரணை சர்வதேச பொறிமுறையினூடாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

5. விசாரணையின்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் காலதாமதமின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.
6. காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினைக்கு முடிவுவொன்று விரைந்து காணப்படல் வேண்டும்.
7. போரின் விளைவாக உருவான பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான தகுந்த வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
8. இடம் பெயர்ந்து வாழும் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.
9. ஏனைய பிரதேசங்களுக்குச் சமனாக வடகிழக்கிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

10. ஏனைய மக்களுக்குக் கிடைப்பது போன்ற தொழில் வாய்ப்புக்கள் வடகிழக்கு மக்களுக்கும் கிடைக்க ஆவன செய்யப்படல் வேண்டும்.
11. வடகிழக்கில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் பிறரின் ஆதிக்கம் இல்லாத நிலை உருவாக்கப்படல் வேண்டும்.

ஆனால் மறுபக்கத்தில் தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் நிகழ்சிக்காக முன்வைத்துள்ள பதினொரு அம்ச கோரிக்கைகளில் வடகிழக்கில் அடுத்த சிறுபான்மை இனமாக வாழுகின்ற முஸ்லிம்களின் பிரச்சனைகள் ஏதும் சுட்டிக்கட்டப்படவில்லை ஏன் என தமிழ் மக்கள் பேரவின் இணைத்தலைவர் வசந்தராஜாவிடம் வினவிய பொழுது தமிழ் பேசும் மக்களினுடைய பிரச்சனைகள் என நாங்கள் சுட்டிகாட்டியுள்ள விடயங்கள் அனைத்தும் தமிழினை தாய்மொழியாக் கொண்டு வாழுகின்ற வடகிழக்கு முஸ்லிம்களினுடைய பிரச்சனைகளாகவும் பார்க்கப்பட்டே நாங்கள் குறித்த பதினொரு அம்ச கோரிக்கைகளையும் எழுக தமிழ் நிகழ்ச்சி நிரழின் ஊடாக முன்வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

இருந்தும் இந்த நாட்டில் வடகிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்கள் தமிழினை தாய்மொழியாக கொண்டு வாழ்ந்தாலும் அவர்கள் பின்பற்றும் இஸ்லாமிய சமயத்தின் அடிப்படையிலும், கலாச்சார விழுமியங்களின் அடிப்படையிலும் அவர்கள் ஒரு தனித்துவமான இனம் என்பது எல்லா சமூகத்தினாலும் அங்கீகரிக்கக்கபட வேண்டிய, ஏற்கொள்ள பட வேண்டிய விடயங்களாகும். அந்த வகையிலே இந்த நாட்டில் யுத்தத்திற்கு பிற்பாடும், முற்பாடும் முஸ்லிம் சமூகமும் பல பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து பல பிரச்சனைகளுடன் வாழ்ந்து வருகின்றமையினை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஆகவே முஸ்லிம்களினுடைய பிரச்சனைகளை நாங்கள் முன்வைத்து அவைகளுக்கான தீர்வுகளை நோக்கிய நகர்வுகளை முன்னெடுக்க முடியாது. எனவே முஸ்லிம் சமூகத்தின் தரப்பிலுள்ள சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள், அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள் போன்றவர்களை உள்ளடக்கிய அமைப்புக்கள் முஸ்லிம்களினுடைய பிரச்சனைகள் சம்பந்தமாக நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களை முன்வைத்து எங்களுடன் சுமூகமான முறையில் கலந்துரையாடி எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்மனங்களை நோக்கிய நகர்வுகளில் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய சமகால சூழ்நிலைக்கு தேவையான முக்கிய விடயமாகும்.

அதன் அடிப்படையிலே எங்களினுடைய தமிழ் மக்கள் பேரவையும் அதன் இணைத்தலைவர்களில் ஒருவராக செயற்படுகின்ற வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் வடகிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்களினுடைய பாதுகாப்பு மற்றும் ஏனைய பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் சிவில் அமைப்புக்களோடு வடகிழக்கில் வாழுகின்ற முஸ்லிம்களினுடைய பிரச்சனைளுக்கான தீர்வுகள் சம்பந்தமாக கலந்துரையாடி வருகின்றோம். அதன் முதற்கட்டமாக சில வாரங்களுக்கு முன்னர் காத்தான்குடி, மற்றும் ஏறாவூரில் செயற்படுகின்ற பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனங்களோடும், கல்குடாவின் முஸ்லிம் சிவில் அமைப்பாக செயற்படுகின்ற மஜ்லிஸ் சூறா அமைப்பினோடும் தீர்க்க்கபட வேண்டிய முஸ்லிம்களினுடைய பிரச்சனைகள் சம்பந்தமாக கலந்துரையாடி இருக்கின்றோம் என தெரிவிக்கின்றார் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் செஞ்சிலுவை சங்கத்தின் மட்டகளப்பு மாவட்ட கிளையின் தவிசாளருமான வசந்தராஜா.

இறுதியாக இம்மாதம் 21ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் நிகழ்விற்கு கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பூரண ஒத்துளைப்பினை வேண்டி நிற்பதுடன், அணனைத்து முஸ்லிம்களும் எழுக தமிழ் நிகழ்வில் பங்குபற்றி இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களினுடைய தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நோக்கிய நகர்வுகளில் ஒருகிணைந்து எழுக தமிழ் நிகழ்வில் பங்குகொள்ளுமாறு திறந்த அழைப்பு விடுக்கும் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்போடு அதன் இணைத்தலைவர் வசந்தராஜாவிடம் முஸ்லிம்களினுடைய பிரச்சனைகள் சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவரினால் வழங்கப்பட்ட விரிவான பதில்களின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

tami tami.jpg2 tami.jpg2.jpg3 tami.jpg2.jpg3.jpg4.jpg5 tami66

Web Design by The Design Lanka