வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுமாறு ஆர்ப்பாட்டம்! - Sri Lanka Muslim

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுமாறு ஆர்ப்பாட்டம்!

Contributors

(கொழும்பிலிருந்து ஏ.எல்.ஜுனைதீன்)

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு கோரி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் இன்று  31 ஆம் திகதி  பிற்பகல் 3.30 மணியளவில் லிப்டன் சுற்றுவட்டத்தில் உள்ள தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் சிங்கள தமிழ் முஸ்லிம் ஒற்றுமையைப் பாதுகாப்போம். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை  உடனடியாக குடியேற்று. இலங்கை நாடு எல்லோருக்கும் சொந்தம்,என்பன போன்ற கோஷங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் சகோதரத்துவ  அமைப்பின் ஏற்பாட்டாளரும் முன்னாள் எம்.பி.யுமான  மொஹமட் முஸம்மில்,  எம். எப். எம். பரூத் மெளலவி, டாக்டர் ஏ.சி.எம்.சலீம் உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர். முஸ்லிம் பெண்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
1s2
1s3

Web Design by Srilanka Muslims Web Team