வடக்கில் இராணுவ ஆட்சி நிலவுவதாக காண்பிக்க கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. விநாயகமூர்த்தி முரளிதரன். - Sri Lanka Muslim

வடக்கில் இராணுவ ஆட்சி நிலவுவதாக காண்பிக்க கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. விநாயகமூர்த்தி முரளிதரன்.

Contributors

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவ ஆட்சி நடைபெற்றால் எவ்வாறு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார் .
வடக்கில் இராணுவ ஆட்சி நிலவுவதாக காண்பிக்க கூட்டமைப்பு முயற்சிக்கின்றது .
முன் எப்போதும் இல்லாத வகையில் வடக்கு கிழக்கில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது .
இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் .
நாடு அரிசியில் இன்று தன்னிறைவு அடைந்துள்ளது ,
எந்தவொரு விடயத்திலும் குற்றம் குறை காண்வது இலகு , எனினும் அவற்றை பாராட்டுவது மிகவும் அரிது .
வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் மக்களுக்கு நலன்களை வழங்கியுள்ளது .
குறிப்பாக வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி பிரச்சினைக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார் .
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் .

Web Design by Srilanka Muslims Web Team