வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த கூட்டமைப்பு இரகசிய ஏற்பாடு - சிங்கள பத்திரிகை - Sri Lanka Muslim

வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த கூட்டமைப்பு இரகசிய ஏற்பாடு – சிங்கள பத்திரிகை

Contributors

வடக்கில் மாவீர்ர் தின நிகழ்வுகளை நடாத்த இரகசிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் நோக்கில் மாவீர்ர் தின நிகழ்வுகள் நடாத்தப்பட உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கான இரகசிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி தோராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீர்ர் துயிலும் இல்லமொன்றில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீர்ர் தின நிகழ்வுகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மாவீர்ர் தின நிகழ்வுகளை நடாத்துவது குறித்து இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரவினர் தெரிவிப்பதாக குறித்த சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team