வடக்கில் முஸ்­லிம்­களின் மீள்­கு­­டி­யேற்­றத்­திற்­கு வட­மா­கா­ண­சபை பூர ண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும் - ஹுனைஸ் பாரூக் - Sri Lanka Muslim

வடக்கில் முஸ்­லிம்­களின் மீள்­கு­­டி­யேற்­றத்­திற்­கு வட­மா­கா­ண­சபை பூர ண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும் – ஹுனைஸ் பாரூக்

Contributors

வடக்கில் முஸ்­லிம்­களின் மீள்­கு­­டி­யேற்­றத்­திற்­கு வட­மா­கா­ண­சபை பூர ண ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும். இது விட­யத்தில் முத­ல­மைச்­சரை முழு­மை­­யாக நம்­பலாம் என வன்னி மாவட்ட பாரா­­ளு­மன்ற உறுப்­பி­னரும் அகில இலங்கை முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தித் தேசிய அமைப்­­பா­ள­ரு­மான ஹுனைஸ் பாரூக் தெரி­வித்­தார்.

வடக்­கி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளியேற்­றப்­பட்டு 23 வரு­டங்­கள் நிறை­வ­டைந்­தி­ருக்கும் நிலையில் அம்­மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் கேட்­ட­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கை­யி­ல்,

1990 ஆம் ஆண்டு ஆயு­தம் தாங்­கிய விடு­தலை புலி­க­­ளினால் முஸ்லிம்கள் பல­வந்­த­­மாக வடக்­கி­லி­ருந்து வெளியற்­றப்­பட்­டு 23 வரு­டங்கள் நிறை­வ­­டைந்தும் அது இன்­னும் கசப்­பா­ன­தொரு சம்­­ப­வ­மா­கவே இருக்­கி­ற­து. இவ்­வாறு முஸ்­லிம்­­கள் வெளியேற்­றப்­படும் போது சாதாரண தமிழ் மக்கள் கண்ணீர் விட்டு அழுத நிகழ்வும் எம் மனதில் இருந்து இன்னும் நீங்­க­வில்­லை.

முஸ்­லிம்­களின் வெளியேற்றத்தை எம்மால் மறக்­கவும் முடி­யாது. மன்­னிக்­கவும் முடி­யாது, மட்­டு­மன்றி  அப்­பா­வித் தமிழ் மக்கள் எமக்­காக கண்ணீர் சிந்தி­ய­தை­யும் எம்மால் ஒரு­போதும் மறக்க முடி­யா­­து.

வடக்கில் கூட்­ட­மைப்பு ஆட்­­சி­ய­மைத்­தி­ருக்­கி­றது. அக்­கூட்­ட­மைப்பில் பல கட்­சிகள் இருக்­கி­ன்­றன. எனினும் முத­ல­மைச்சர் ஆயுத கலா­சா­ரத்­தி­லி­ருந்து விலகி நிற்­பவர். அவர் ஒரு பொது­நி­லை­வாதி எனவே முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் அவரை முழு­மை­யாக நம்­ப­லாம்.

கூட்­டமைப்பு கடந்த காலங்­களில் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தில் விருப்­ப­மில்­லாத தன்­மை­யையே கடை­பிடித்து வந்­துள்­ளது. அதன் உறுப்­பி­னர்கள் பலர் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு எதிர்­ப்பை காட்­டி­யுள்­ளனர்.

வடக்­கி­லி­ருந்து முஸ்லிம்­கள் வெளியேற்­­றப்­பட்டு 23 ஆண்­டு­க­ளா­கின்­றன. இப்படி ஒவ்­வொரு வரு­டங்­க­ளையும் என்­னிக்­கொண்­டே இருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. இனி அவ்­வா­றா­ன­தொரு நிலை ஏற்­ப­டக்­கூ­டாது. 24 வரு­டங்கள் பூர்த்­தி­யாகி விட்­ட­­தென்று அடுத்த வருடம் கூறும் நிலைமை ஏற்­ப­டு­வதை தடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு 22 ஆம் வருட முஸ்­­லிம்­களின் வெளியேற்­ற நினைவு தின நிகழ்­­வொன்­றி­ன்­போது பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உரை­யாற்­று­கை­யில் ‘ அடுத்த வரு­டத்­திற்குள் முஸ்­லிம்கள் முழு­மை­யாக மீள்­கு­டி­ய­மர்த்­தப்­ப­டுவர்’ என தெரி­வித்­த­தி­ருந்தார். எனினும் துர­திஷ்­ட­வ­ச­மாக அது நிக­ழ­வில்­லை. ஆனால் அடுத்த ஆண்­டுக்குள் அதனை சாத்­தி­யப்­ப­டுத்த வேண்டும்.

இதே­வேளை அடுத்த வரு­டத்­திற்­கான வரவு செலவு திட்­டத்தின் போது இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு நிதி ஒதுக்­கீடு வழங்க வேண்டும் என்­பது தொடர்பில் ஜனா­தி­ப­தி­யு­­ட­னான கல­ந்­து­ரை­யா­டலில் நான் ஆலோ­ச­­னை­களை முன்­வைத்­துள்ளேன். குறிப்­பாக கடந்த காலங்­களில் புதிய அக­திகள் பழைய அக­திகள் என பிரிக்­கப்­பட்டு மீள்­கு­டி­யேற்­றப்­படும் மக்­க­ளுக்­கான உத­வித்­திட்­டத்தின் போது பார­பட்சம் காட்­டப்­பட்­டது. எனினும் அடுத்த வரு­டத்­திற்­கான நிதி ஒதுக்­கீட்­டின்­போது பழைய அக­­தி­க­ளுக்­கான உதவித் தொகைக்கு அதிக நிதியை ஒதுக்­கித்­த­ரு­மாறு ஜனா­தி­­ப­­தி­யிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளேன். இது தொடர்பில் அவர் கவனம் செலுத்­­து­வ­தாக கூறி­யி­ருந்­தார்.

பழைய அக­திகள் எனும் போது 1990 ஆம் ஆண்டும் அதற்கு முன்­னரும் வெளியேற்­ற­ப்­பட்ட முஸ்­லிம்கள் அடங்­குவர். அத்­தேடு இறுதிக்­கட்ட யுத்­தத்­திற்கு முன்னர் இடம்­பெ­யர்ந்த தமி­ழர்­களும் சிங்­க­ள­வர்­களும் நன்­மை­ய­டை­வர் என்­றார்.

Web Design by Srilanka Muslims Web Team