வடக்கும் கிழக்கும் இணைந்து புதிய இராஜ்ஜியமாக மாறிவிடும் என்ற பீதி ஏற்பட்டுள்ளது. - Sri Lanka Muslim

வடக்கும் கிழக்கும் இணைந்து புதிய இராஜ்ஜியமாக மாறிவிடும் என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

Contributors


மாகாண சபைகள் தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். எனினும் நாட்டின் அரசியலமைப்பு

அது தேவை என்கிறது. மாகாண சபை முறையை நான் எதிர்க்கிறேன் என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன். அதன் மூலம் நாட்டின் ஒற்றையாட்சிக்கு பலமான அடி விழுவதுடன் எமது நாட்டையும் ஒரு பெடரல் நாடாக மாற்றியமைக்க வேண்டியேற்படும்.


புதிய அரசயலமைப்பொன்றை நாம் தாயாரிக்கப்போகிறோம். அதன்படி குறைந்த அதிகாரங்களுடனான் மாகாண சபைகள் இயங்குவதை நாட்டின் பொதுமக்களும் விரும்புவார்கள். நாட்டின் வடக்கும் கிழக்கும் ஒன்றிணைந்து புதிய அரசொன்று உருவாகிவிடுமோ என்ற பீதி நாட்டுப்பற்றுள்ள மக்களின் உள்ளங்களை ஆட்டிப்படைத்துள்ளது. அதனால்தான் ஆரம்ப காலம் முதல் அவ்வாறானவர்கள் மாகாண சபைகளை வரவேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார் பொது மக்கள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் – சரத் வீரசேகர.சிங்கள நாளேடொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.கேள்வி :- தற்போதைய அரசு நாட்டின் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சியை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதேன்?பதில் :அந்த தீர்மானத்தை எடுத்திருப்பது தற்போதைய அசாங்கமல்ல அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நான் அது விடயத்தை விரைவில் பாராளுமன்றத்தில் முன் வைப்பேன். இதன் மூலம் நாட்டில் ராணுவ மயப்படுத்தல் நடைபெறப்போவதில்லை.பலர் இது விடயம் பற்றி மிகத்தவறாக விளங்கிக் கொண்டுள்ளனர். பாடசாலையை விட்டும் வெளியேறிய 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்கு இராணுவப் பயிற்சியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தான் நான் கூறியிருந்தேன். அதன் மூலம் அந்த இளைஞர்கள் இராணுவப் படையில் படைவீரர்களாக மாறவேண்டுமென்பதல்ல அதன் கருத்து. எனினும் ஓரளவாவது ஒழுங்கைப் பேணக்கூடியதும் தலைமைத்துவம், ஆளுமை, நாட்டின் சட்டத்தை மீறினால் கிடைக்கும் தண்டனைகள், போதைப் பொருள் பாவணை போன்ற விடயங்களில் அறிவூட்டி பயிற்சியொன்றை இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுப்பது சிறந்தது.உதாரணமாக கடந்த நான்கு வாரங்களில் மோட்டார் வாகன சட்டவிதிகளை மீறியமையினால் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 110 பேர் இறந்துள்ளனர். இன்னும் 180 பேர் முழுமையாக செயலிழந்துள்ளனர். வாகனப் போக்குவரத்து சட்ட விதிகளை மீறுவதனால்தான் மேற்படி கோர விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. எமது நாட்டு மக்களில் சிலருக்கு இன்னும் எப்படிப் பாதையில் செல்வதென்று தெரியாது. அவர்கள் பாதை ஒழுங்குகளைப் பேணுவதில்லைபின்னேரங்களில் பெண்களுக்கு தனியே பாதையில் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் சின்னப் பிள்ளையொன்றுக்குக் கூட பாதுகாப்பாக பாதையில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எமது இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டனர். பொது மக்கள் பாதுகாப்பு ராஜங்க அமைச்சர் என்ற வகையில் இவை என் கண்களுக்குத் தெரிகிறது. குறைந்த பட்சம் பண்பாடான சமூகமொன்றை உருவாக்க வேண்டுமானால் இளம் சந்ததியினருக்கு இது விடயங்களில் பயிற்சிகள் வழங்க வேண்டும். எழுந்து நேராக நிற்றல,; முகத்தை பார்த்துப் பேசுதல், தலைமைத்துவம்;, தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக (கராதே, ஜுடோ போன்ற) தற்காப்பு முறைகளில் பயிற்சி வழங்கல், மற்றுமொரு மொழியைக் கற்றல் போன்ற, விடயங்களில் உரிய முறைப்படி பயிற்சி வழங்கினால் நாட்டில் ஒழுக்கமுள்ள சமூகமொன்றைக் கட்டியெழுப்பலாம் என்று நான் நினைக்கிறேன்.கடந்த எமது ஆட்சிக்காலத்தில் பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. ஒரு சிலர் அதற்கு தமது எதிர்ப்பைக் காட்டினர். உங்களது பத்திரிகையும் அவ்வாறே எதிர்ப்புக் காட்டியது . ஆனால் அந்த பயிற்சியை முடித்துக் கொண்ட மாணவர்கள் அவ்வாறான பயிற்சியைப் பெறாத மாணவர்களை விட ஒழுக்கசீலர்களாக இருந்தார்கள். இவர்கள் அனைவரும் பிரியாவிடைiயின் போது தமது ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து விட்டு அழுதுவிட்டுத்தான் சென்றார்கள். அவர்களிடம் அந்த வேளையில் காணப்பட்ட ஆத்ம சக்தி உயர் நிலையில் காணப்பட்டது. அவ்வாறான ஒரு பயிற்சி பற்றித்தான் நான் கூறினேன்.கேள்வி :- பாதுகப்புப் பிரிவில் சேவையாற்றிய ஒரு சிலர் பாதாள உலகத்தின் குற்றாவாளிகளாக மாறியுள்ளார்கள். அவர்களில் இன்னும் சிலர் வேறு சில குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள். பாதாள உலகத்தில் இருந்த குற்றவாளிகளில் சிலர் தாம் கடைமையாற்றிய பாதுகாப்புப் பிரிவின் பெயரைப் பயன்படுதுவதன் மூலம தம்மை அறிமுகப்படுத்திக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்கள். பாதுகாப்புப் பிரிவின் பயிற்சியின் போது ஒழுக்கம், கட்டுப்பாடு, சட்டத்துக்குக் கட்டுப்படல் போன்ற நல்லம்சங்கள் காணப்படின் பாதுகாப்புப் பிரிவில் இது போன்ற குற்றவாளிகள் உருவாகமாட்டார்கள் தானே?பதில் :-அது நல்ல கேள்வியொன்று. எமது நாட்டில் தரைப்படையில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் வரை கடைமையாற்றுகிறார்கள். கடற்படையில் ஐம்பத்துமூவாயிரத்துக்கும் அதிகமான பேர் உள்ளனர். அவற்றில் ஓய்வு பெற்றவர்களும் உள்ளார்கள். மொத்தமாக பாதுபாப்புப் படையில் கடைமையாற்றுபவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு மில்லியனாகும். அதில் பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அது 0.00001 ஆகும். எனவே அநதக் குற்றச்சாட்டை முழுப்படையினர் மேல் சுமத்துவது அபாண்டமாகும்.கேள்வி :- சமயத்தின் அடிப்படையில் வாழ்ந்து கொண்டு சமயத்தினால் பாதுகாக்கப்படுகிறோம் என்ற முன்மாதிரியாண சுலோகங்களை தம்மீது வைத்துக்கொண்டு சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு கட்டுப்பட்டுள்ளது ஸ்ரீ லங்கா போலிஸ் பிரிவு. ஆனால் அந்தப் பிரிவில் கடைமையாற்றுவோரில் 10மூ மானோர் போதைப் பொருள் பாவிப்போருடன் தொடர்படையுடையவர்களாக உள்ளனர் என்று நீங்களே ஒரு தடவை கூறினீர்கள். போலிஸ் பிரிவும் தமது முன்மாதிரிமிக்க சுலோகங்களின் அடிப்படையில் கடமையாற்றுகிறார்கள் இல்லை என்பதுதானே அதிலிருந்து விளங்குகிறது.பதில் :-போலீஸ் பிரிவு மிகவும் கண்ணியமான சேவையில் ஈடுபட்டு வருகிறது. ஏனைய எல்லா ராணுவங்களிலும் இருப்பது பொன்று போலீஸ் பிரிவிலும் போலீஸ் பிரிவை அபகீர்த்திக்கும் அவமானத்துக்கும் உள்ளாக்கும் ஒரு சில அதிகாரிகள் உள்ளனர்.அந்த நிலை பொலிஸ் பிரிவுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதொன்றல்ல. அவ்வாறானவர்கள் ஊடகங்களில் படைப்பிரிவுகளில், வங்கித்துறையில் மட்டுமன்றி சகல நிறுவனங்களிலும் மோசடிகளில் ஈடுபடுவோர் இருக்கின்றார்கள். போலிஸ் பிரிவிலும் அவ்வாறானவர்கள் இருக்கிறார்கள்தான் அவ்வாரானவர்களை கண்டுபிடித்து உரிய விசாரணைகளுக்கு உட்படுத்தி அவர்களை தொழில்களிலிருந்தும் விலக்கி போலிஸ் பரிவை சுத்தப்படுத்துவோம்.அவ்வாறு சுத்தப்படுத்துவது என்று கூறுவதன் கருத்து போலிஸ் பிரிவு தமது கண்ணியத்தை இழந்துவிட்டது என்ற கருத்தல்ல. எமது போலிஸ் மிக கண்ணியமான சேவையில் ஈடுபட்டு வருகிறது. சில போலீஸ் நிலையங்களில் மோசடி தடுப்புப் பிரிவுகளிலுள்ள பொறுப்பதிகாரிகளை நாம் கைது செய்துள்ளோம் அநுராதபுரம் மற்றும் தொம்பே பகுதிகளில் அவ்வாறானவர்களை கைது செய்து இவர்களைப் பதவி நீக்கம் செய்துள்ளோம. போலீஸ் நிலயங்களுக்குள் இருந்துதான் அவர்களைப் பிடித்தோம். பொலீஸ் பிரிவிலுள்ள மோசடியான அதிகாரிகளை பதவி நீக்கம் செய்துள்ளோம். போலீஸ் பிரிவை பொது மக்கள் நம்பிக்கையை வென்ற இடமாக நாம் மாற்றியமைப்போம். பயமச்சமின்றி வாழக்கூடிய சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதுதான் எமக்குத் தரப்பட்டுள்ள பொறுப்பு. அதை போலீஸ் பிரிவினால் மட்டுமே செய்ய முடியும்.கேள்வி :- . பெஸில் ராஜபக்ஷ , மாகணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படல் வேண்டும் என்றும் அதன்மூலம் அந்த நிறுவனங்களுக்குரிய அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டுமென்றும் கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா அரசு மாகாண சபை தேர்தலை நடத்துவது மிகவும் அவசியமானது என்ற உறுதியான நிலைப்பாட்டில் இந்திய அரசும் இருக்கிறது. மாகாண சபைகள் முறை அடிப்படைச் சட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதனால் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பின்றி அந்த நிறுவனங்கள் அரச அதிகாரிகள் மூலமாகவே தற்போது இயங்கி வருகின்றன. அது சட்டத்துக்கு முறனான ஒரு விடயமாகும் என்று இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மாகாண சபைகள் முறை இந்த நாட்டுக்கு அவசியமில்லை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள் அதைப்பற்றி உங்களால் என்ன கூற முடியும்?பதில் :-மாகாண சபைகள் தேவையில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். எனினும் நாட்டின் அரசியலமைப்பு அது தேவை என்கிறது. மாகாண சபை முறையை நான் எதிர்க்கிறேன் என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன்.தன் மூலம் நாட்டின் ஒற்றையாட்சிக்கு பலமான அடி விழுவதுடன் எமது நாட்டையும் ஒரு பெடரல் நாடாக மாற்றியமைக்க வேண்டியேற்படும். இந்த நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்கு கடந்த 2500 வருடங்களாக எம்மில் பல லட்சம் பேர் தமது உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள். அதன்படி இது ஒரே நாடு இதில் ஒரே சட்டம் என்ற நிலை காணப்படுமாயின் ஒன்பது மாகாணங்களில் ஒன்பது வகையான சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது. ஒற்றையாட்சியை விரும்பும் ஒரு அரசு என்ற வகையில் அது பற்றி சிந்திப்பது பிழையல்ல. எவ்வாறாயினும் அது விடயத்தில் புதிய அரசயலமைப்பொன்றை நாம் தாயாரிக்கப்போகிறோம். அதன்படி குறைந்த அதிகாரங்களுடனான் மாகாண சபைகள் இயங்குவதை நாட்டின் பொதுகமக்களும் விரும்புவார்கள். நாட்டின் வடக்கும் கிழக்கும் ஒன்றிணைந்து புதிய அரசொன்று உருவாகிவிடுமோ என்ற பீதி நாட்டுப்பற்றுள்ள மக்களின் உள்ளங்களை ஆட்டிப்படைத்துள்ளது. அதனால்தான் ஆரம்ப காலம் முதல் அவ்வாறானவர்கள் மாகாண சபைகளை வரவேற்கவில்லை.தமிழில் : எம்.எச்.எம் நியாஸ்

thinakural

Web Design by Srilanka Muslims Web Team