வடக்கு கிழக்கை இணைக்க கூட்டமைப்பினர் முயற்சி - வன்மையாக எதிர்க்கிறது உலமா கட்சி - Sri Lanka Muslim

வடக்கு கிழக்கை இணைக்க கூட்டமைப்பினர் முயற்சி – வன்மையாக எதிர்க்கிறது உலமா கட்சி

Contributors

( எஸ்.அஷ்ரப்கான் )
வடக்கு கிழக்கை இணைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதாச்சாதிகார முயற்சியை முஸ்லிம் மக்கள் வன்மையாக எதிர்க்கிறது என அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களும் கிழக்கு மக்களும் இணைந்து இரு மாகாணங்களையும் இணைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்ற வடமாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரனின் கருத்து பற்றி கூறும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

கிழக்கு மாகாணம் வடமாகாணத்துடன் இணைந்திருந்த இருபது வருட காலம் என்பது கிழக்கு மக்களின் குறிப்பாக முஸ்லிம் மக்களின் இருண்ட காலமாகவே இருந்த வரலாற்றை நாம் மறந்து விட முடியாது.  இத்தகைய நிலைக்கு புலிகள் மட்டுமல்ல மேலாதிக்க சிந்தனையுள்ள வட பகுதி அரச ஊழியர்களும் பிரதான காரணமாக இருந்தார்கள்.

இந்த யதார்த்த நிலையை கருத்திற்கொண்டு கிழக்கு முஸ்லிம்களுக்கு தனியான மாகாண நிர்வாக சபை ஒன்றை வழங்காமல் கிழக்கை வடக்குடன் இணைப்பதை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக எதிர்க்கிறது. கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் இணைத்து தனியான நிர்வாக சபை வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் உறுதியான கொள்கையாகும்.

இதனை நிர்வகிப்பதில் எந்த சிக்கலும் வராது. எவ்வாறு கல்முனை பிரதேச செயலகம் இரண்டாக பிரிக்கப்பட்டு தமிழ் செயலகம்இ முஸ்லிம் செயலகம் என இருக்கிறதோஇ இயங்குகிறதோ அதே போன்ற ஒரு நடைமுறையை கிழக்கு மாகாணத்துள் தனியாக ஏற்படுத்த தமிழ் கூட்டமைப்பு பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளாதவரை வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது எனவும் மௌலவி முபாறக் குறிப்பிட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team