வடக்கு முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோது கெமரூன் எங்கிருந்தார்? பைஸர் முஸ்தபா கேள்வி - Sri Lanka Muslim

வடக்கு முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோது கெமரூன் எங்கிருந்தார்? பைஸர் முஸ்தபா கேள்வி

Contributors

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் வடக்கிற்கு சென்று மனித உரிமை பற்றி பேசினார். வடக்கில் புலிகளால் உடுத்த உடைகளுடன் அப்பாவி முஸ்லிம்கள் விரட் டியடிக்கப்பட்ட போது இந்த கெமரூன் எங்கிருந்தார்? என பிரதி அமைச் சர் பைஸர் முஸ்தபா கேள்வி எழுப்பியுள்ளார்.

இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்களையும், கெமரூன் சென்று பார்த்திருக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகளையும், சர்வதேசத்திற்கு எடுத்து கூறியிருக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இதுபோன்று வடக்கிலும், கிழக்கிலும் முஸ்லிம்களுக்கெதிராக பல வன்முறைகள் அரங்கேற் றப்பட்டன.

அது பற்றி வாயே திறக்காத கெமரூன், ஒருதலைப் பட்சமாகவும், பக்கச்சார்பாகவும் நடந்து கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார்.(thi)

Web Design by Srilanka Muslims Web Team