வடக்கு முஸ்லிம்: திரும்பிவந்து பார்க்கின்ற போது வாழ்வதற்கு வீடுகள் இருக்கவில்லை - Sri Lanka Muslim

வடக்கு முஸ்லிம்: திரும்பிவந்து பார்க்கின்ற போது வாழ்வதற்கு வீடுகள் இருக்கவில்லை

Contributors

(இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்)

வவுனியா மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்படும் இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பில் தெரிவுகளை மேற்கொள்வது இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயமே தவிர அரசியல் வாதிகள் அல்ல என

தெரிவிததுள்ள வவுனியா நகர சபையின் முன்னால் உறுப்பினரும்,வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான அமைப்பின் தலைவருமான அப்துல் பாரி வவுனியாவில் உள்ள தமிழ் -முஸ்லிம் மக்களிடத்தில் பிளவினை ஏற்படுத்த சில இனவாத அரசியல் சக்திகள் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனை தொடர்புபடுத்தி வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  சிவசக்தி ஆனந்தனின் நெறீப்படுத்தலில்  நடத்தப்பட்ட ஆரப்பாட்டம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அப்துல் பாரி  கூறுகையில்- கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வவுனியாவில் இந்திய அரசாங்கம் முஸ்லிம்களுக்கும் வழங்க தீர்மானித்த வீடுகள் தொடர்பில் பல ஆர்பாட்டங்களை செய்ததுடன்,இந்திய உயர் ஸ்தானகர் ஆலயத்திற்கும் பிழையான தகவல்களை வழங்கி இந்த திட்டத்தில் இருந்து வவுனியா மாவட்ட முஸ்லிம்களையும் அப்புறப்படுத்த முயன்றனர்.இந்த வேளை அப்போதைய இந்திய உயர் ஸ்தானிகராக இருந்த அசேக் கே காண்த்தா அவர்கள்.வவுனியாவுக்கு வருகைததந்து பொதுமக்களையும்,அமைப்புக்களையும் சந்தித்து உண்மை நிலைமையினை கேட்டறிந்ததன் பின்னர் யுத்தத்தால் முஸ்லிம்களும் இழப்புக்களை சந்தித்துள்ளனனர்

அவர்களும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று கூறியதுடன்,ஒரு போதும் முஸ்லிம்களுக்கு எம்மால் அநியாயம் இழைக்கப்படாது என்ற உறுதிப்பாட்டினையும் வழங்கி சென்றார்.அது அவ்வாறு இருக்க இந்த வீடமைப்பு திட்டம் தொடர்பில் தெரிவுகளை இந்திய அரசாங்கத்தினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் விபரங்களை திரட்டி புள்ளிகளை வழங்கி அதற்கமைய இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த அசாதாரண காலங்களில் நிலவிய சூழல் காரணமாக இம்மாவட்டடத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களும் வெளியேற்றப்பட்டிருந்தனர்.பின்னர் மீண்டும் அவர்கள் தமது பிரதேசங்களுக்கு வருகைத்தந்து பார்க்கின்ற போது,இங்கு வாழ்வதற்க வீடில்லாத நிலை இருந்தது என்பதை .ங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்  அவர்கள்,வன்னி மாவட்டத்தில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் பணியாற்றிவருகின்றார்.வவுனியா மாவட்டத்தில் கடந்த காலங்களில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்ட அனைதது வீடுகளும் தமிழ் மக்களுக்கே வழங்கப்பட்டது.அதில் நியாயம் இருந்தது இந்த மண்ணிலிருந்த முஸ்லிம்கள் அப்போது வெளியேற்றப்பட்டிருந்தனர்.மீண்டும் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற வந்தும் இன்னும் உரிய வசதிகள் கிடைக்காத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற போதும்,எந்த சந்தரப்பத்திலும் எவருக்கும் எதிராக எந்தவொரு ஆரப்பாட்டத்தையும் நடத்தியதில்லை.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதி நிதிகள் தொடராக முஸ்லிம்களையும்,முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் ஏளனப்படுத்தும் வேலைகளை செய்துவருவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்,இரா சம்பந்தன்,மூத்த தலைவர் மாவை சேனாதி ராஜா,பாராளுமன்ற உறுப்பினர்.சுமந்திரன் ஆகியோருக்கு ஏற்கனவே எழுத்து மூலமாக அறிவித்திருந்ததையும் முன்னால் வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team