வடமாகாணத்தில் புதிதாக 90000 வாக்காளர்கள் சேர்ப்பு: உள்ளூராட்சி தேர்தல் விருப்பு வாக்கு முறைமையிலும் மாற்றம் - Sri Lanka Muslim

வடமாகாணத்தில் புதிதாக 90000 வாக்காளர்கள் சேர்ப்பு: உள்ளூராட்சி தேர்தல் விருப்பு வாக்கு முறைமையிலும் மாற்றம்

Contributors

வடமாகாணத்திலிருந்து 90,000 வாக்காளர்கள் 2013 ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் இடாப்பில் சேர்க்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

2012 வாக்காளர் பட்டியல் இவ்வருடம் டிசம்பர் பூர்த்தியாகிவிடுமென தேர்தல் ஆணையாளர் கூறினார்.

2012 இல் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் 10 சதவீதமானேர் வடமாகாணத்தினர் என அவர் கூறினார்.

2013 வாக்காளர் பட்டியலும் டிசெம்பர் 23 இல் தயாராகிவிடுமென தேர்தல் ஆணையாளர் கூறினார்.

இவ்வருட வாக்காளர் பட்டியலில் 1.2 மில்லியன் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதாகவும் 71,7512 வாக்காளர்கள் அகற்றப்பட்டதாகவும் திணைக்களம் கூறியது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விருப்பு வாக்கு முறைமையில் மாற்றம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் விருப்பு வாக்கு முறைமையில் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையாளர் யோசனை முன்வைத்துள்ளார்.

வேட்பாளர்களுக்கு ஒரு விருப்பு வாக்கை மட்டும் அளிக்கும் வகையில் தேர்தல் சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனை கோரப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு மூன்று விருப்ப்பு வாக்குகளை அளிக்க முடியும்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது வாக்குச் சாவடிகளில் அல்லது தேர்தல் தொகுதி அடிப்படையில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விருப்பு வாக்கு எண்ணுதல் தொடர்பில் மக்கள் மத்தியில் ஐயம் நிலவி வருகின்றது.

வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் வாக்கு எண்ணுதல் தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team