வடமாகாண சபையின் அடுத்த அமர்வு நவம்பர் 11இல் - Sri Lanka Muslim

வடமாகாண சபையின் அடுத்த அமர்வு நவம்பர் 11இல்

Contributors

வடமாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி நடைபெறுமென தவிசாளர் கந்தையா சிவஞானம் அறிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.   இந்த நிலையில் முதலாவது அமர்வின் முதல் நிகழ்வாக தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டன. தவிசாளாராக கந்தையா சிவஞானமும் உபதவிசாளராக அன்ரனி ஜெகநாதனும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தவிசாளர் கந்தையா சிவஞானம் தலைமையில் அவை நிகழ்வுகள் நடைபெற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுற்றது.

இதன்போது அடுத்த அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி நடைபெறுமெனவும் தவிசாளர் அறிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team