வடமாகாண முஸ்ஸிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முதலமைச்சர் முறியடிக்க வேண்டும்-என்.நகுசீன். - Sri Lanka Muslim

வடமாகாண முஸ்ஸிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முதலமைச்சர் முறியடிக்க வேண்டும்-என்.நகுசீன்.

Contributors

மன்னார் பொன் தீவு கண்டல் கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்படவிருந்த
முஸ்ஸிம் மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் சதித்திட்டம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக மன்னார் நகர சபையின் அரச தரப்பு உறுபபினர் என் . நகுசீன் தெரிவித்துள்ளார் .
இது தொடாபாக அவர் இன்று வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் ; , , ,
நானாட்டான் பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் நானாட்டான் பிரதேசச் செயலகத்தினால் குடியேற்றம் செய்யப்படவிருந்த முஸ்ஸிம் மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றுவதற்காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
இந்த மக்கள் மீள் குடியேறி நானாட்டான் பிரதேசச் செயலாளரினால் காணிகள் பங்கீடு செய்யப்பட்டு வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டுள்ளது .
– இந்த நிலையில் இவர்களை அவ்விடத்தை விட்டு வெளியேற்ற மாகாண சபை உறுப்பினர் ஒருவர் முயற்சி செய்து வருகின்றார் குறித்த காணி எங்களுடைய பூர்வீகம் அதனை விட்டு வெளியோறுமாறு கூறியுள்ளார் . .
-1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் விரட்டப்பட்டு மீண்டும் குடியேறி வரும் முஸ்ஸிம் மக்கள் 23 வருடம் கழிந்த நிலையில் மீண்டும் விரட்டப்படுவது விடுதலைப்புலிகளின் நடவடிக்கை போன்று செயற்படுவதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .
– முஸ்ஸிம் மக்களை மீண்டும் குடியேறுமாறு வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் அந்த மக்கள் விரட்டியடிக்கும் சம்பவங்களை அவர் முறியடிக்க வேண்டும் . .
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் வடமாகாணத்தில் இடம் ; பெறும் என் ; றால் வடமாகாண முஸ்ஸிம் மக்கள் நம்பிக்கை இழந்தே வாழ வேண்டும் .
– கடந்த கால நிகழ்வுகளை மறக்க வேண்டும் என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இடம் பெயர்ந்த முஸ்ஸிம் மக்களை வடமாகாணத்தில் மீண்டும் மீள் குடியேறுமாறு பகிரங்க அழைப்பு விடுக்க வேண்டும் .
மேலும் அந்த மக்களை அவர்களின் நிலத்தில் சுதந்திரமாக வாழவைக்க வேண்டும் . இதைத்தான் இடம் பெயர்ந்த முஸ்ஸிம் மக்கள் எதிர்பார்க்கின்றனர் . முரண்பாடுகளை தோற்றுவிக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர் .
– இதை தடுத்து நிறுத்த முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் முன்வர வேண்டும் என மன்னார் நகர சபை உறுப்பினர் என் நகுசீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது . tn

Web Design by Srilanka Muslims Web Team