வட மாகாணத்திற்கு அதிவேக வீதி - நிர்மாணப் பணிகள் அடுத்தமாதம் ஆரம்பம் - Sri Lanka Muslim

வட மாகாணத்திற்கு அதிவேக வீதி – நிர்மாணப் பணிகள் அடுத்தமாதம் ஆரம்பம்

Contributors

(Nf) வடக்கு அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு குறிப்பிடுகின்றது.

இந்த நிர்மாணப் பணிகள் மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்டமிடல் அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார்.

வடக்கு அதிவேக வீதி கொழும்பு – கண்டி இடையேயான வீதியென முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும், ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய, வடக்கு வரை இந்த அதிவேக வீதி நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

கம்பஹாவில் இருந்து குருநாகல் வரையும், குருநாகலில் இருந்து கண்டி வரையும், குருநாகலில் இருந்து தம்புள்ளை வரையும் ஒரே சந்தர்ப்பத்தில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுமென நிர்மல கொத்தலாவல குறிப்பிட்டார்.

மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை உரியமுறையில் வழங்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்டமிடல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Web Design by Srilanka Muslims Web Team