வரவு - செலவுத்திட்ட விவாதத்தில் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்றத்தில் வாசித்த கவிதை - Sri Lanka Muslim

வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்றத்தில் வாசித்த கவிதை

Contributors

வரவு – செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்றத்தில் வாசித்த கவிதை..

220 கோடி மக்களின்
தலைவரே நீடுழி வாழ்க!
இது
முன்னர் வாசித்த
பட்ஜெட் அல்ல
ஒரு
மன்னர் வாசித்த
பட்ஜெட்
ஒரு
‘வின்னர்’ (Winner)
வாசித்த பட்ஜெட்
54 நாடுகளின்
பொதுநலவாய தலைவர்
அதாவது
இங்கெல்லாம் வாழும்
220 கோடி மக்களின்
ஏற்றமிகு தலைவர்
தனது
68ஆவது வயதில் சமர்ப்பித்த
சுதந்திர இலங்கையின்
68ஆவது பட்ஜெட்
செலவை
அரசு ஏற்றுக்கொண்டு
வரவை
பொதுமக்களுக்கு தந்த
வரவு -செலவுத்திட்டம்
உலக அரங்கிலே
இமாலய உச்சியைவிட
உயர்ந்த இடத்தில்
அதிமேதகு
ஜனாதிபதியே நீங்கள்
இந்த
பொன்மண் ஈன்ற
பொன்மனச்செம்மலே
நாட்டு மக்களை
எல்லா விதத்திலும்
தன்னிறைவு காண வைக்கும்
பட்ஜெட்
தந்தவரே
அரச ஊழியர்கள்
எல்லாம்
மகிழ்ச்சிக் கடலில்
சம்பள உயர்வு
என்னும்
பாலை வார்த்து
அவர்கள்
உள்ளமெல்லாம்
சந்தோஷப் பூக்களை
தூவி உள்ளீர்கள்
இளைப்பாறியவர்களும்
மனமாறச் செய்துள்ளீர்கள்
அவர்களது
மனமார்ந்த பிரார்த்தனையில்
முன்பைப் போலவே
இம்முறையும் இணைந்து
கொண்டீர்கள்
உங்களது
வடக்கு – தெற்கு
A9 பாதை
போக்குவரத்தை மட்டுமா
இணைத்திருக்கிறது
இதயங்களையும் அல்லவா
கைகோர்க்கச் செய்துள்ளது
யாழிலே, திருமலையிலே சம்பூரண கலாசார
மத்திய நிலையங்கள்
நாடு முழுவதும் ஆயிரம்
மஹிந்தோதய பாடசாலைகள்
மாணவர் மேம்பாட்டுக்கு
எங்கள்
இலங்கை தாய்த்திரு மண்ணின்
இடங்களை எல்லாம் பாருங்கள்
நாடு, நகர வனப்பினை
நவின்றிட –
அதன் புகழ் பாடிட
ஓரிருநாள் போதுமா
‘செலலிஹினிய’
சந்தோஷ தூதுவிடு காவியத்தை
எழுதி வைத்தார்
தொட்டகமுவே ராஹுல தேரர்
எங்களுக்குத் தேவை
இன்னொரு
ராஹுல தேரர்
எங்கள் நாட்டு
அழகினைப் பாட
எங்கள் நாட்டு
தலைவனைப் போற்ற
புதுமணக்கோலம்
பூண்டதே
கோட்டே தியவன்னா ஓய
அழகிய
மணப்பெண்ணாய்
மணவாளர்கள்
படை எடுக்க தொடங்கி விட்டார்கள்
போட்டி போட்டுக்கொண்டு –
54 நாடுகளிலிருந்து
அதுமட்டுமல்ல
சர்வதேச நாடுகளிலிருந்தும்
பறந்து வருகிறார்கள்
எங்கள் தாய்த்திருநாட்டின்
வனப்போடு இதயம்
ஒண்றிப்போக
இலங்கையர்கள் நாங்கள்
பெருமையால் பூரித்துப்போயுள்ளம்
எங்கள் நாட்டு மன்னரே – வின்னரே
பொதுநலவாயத்தின் சக்கரவர்த்தியே – நீங்கள்
வாழ்க – நீடூழி வாழ்க. (vk)

Web Design by Srilanka Muslims Web Team