வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து கொழும்பில் இன்று ஊர்வலம்! - Sri Lanka Muslim

வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து கொழும்பில் இன்று ஊர்வலம்!

Contributors

அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அடுத்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று கொழும்பில் எதிர்ப்பு ஊர்வலம் மற்றும் பேரணிகளை நடத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.

 

இதன்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு புஞ்சி பொரலையில் ஆரம்பமாகவுள்ள மக்கள் எதிர்ப்பு பேரணி மருதானை டீன்ஸ் வீதியுூடாக ஹைட் பார்க்கை வந்தடையவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு ஹைட் பார்க் மைதானத்தில் பாரிய மக்கள் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

-vidivelli

Web Design by Srilanka Muslims Web Team