வருடாந்திர கொண்டாட்ட பேரணியை ரத்து செய்தது ஹமாஸ்! - Sri Lanka Muslim

வருடாந்திர கொண்டாட்ட பேரணியை ரத்து செய்தது ஹமாஸ்!

Contributors

காஸ்ஸா சிட்டி: ஹமாஸ் இயக்கத்தின் வருடாந்திர கொண்டாட்டத்தை தொடர்ந்து நடத்தப்படும் பேரணியை ஹமாஸ் ரத்து செய்துள்ளது. காஸ்ஸாவில் ஆட்சியில் அமர்ந்த பிறகு ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வருடாந்திர கொண்டாட்ட பேரணியை ஹமாஸ் ரத்து செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் சூழலில் பேரணி வேண்டாம் என்று தீர்மானித்ததாக ஹமாஸ் தலைவர் அஷ்ரஃப் அபூ ஸைத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கஷ்டங்களை அனுபவிக்கும் காஸ்ஸா மக்களுக்கு ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இத்தீர்மானம் என்று அஷ்ரஃப் தெரிவித்தார். எகிப்தில் ராணுவ சதிப் புரட்சி நடந்த பிறகு காஸ்ஸா மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வருவது நின்று விட்டது.

முஹம்மது முர்ஸியின் அரசு காஸ்ஸாவுக்காக அனைத்து உதவிகளையும் செய்து வந்தது. ஆனால், ரஃபா எல்லையை மூடியதை தொடர்ந்து காஸ்ஸா மக்கள் நம்பியிருந்த சுரங்கங்களை எகிப்திய சர்வாதிகார ராணுவமும், இஸ்ரேலும் தகர்த்துவிட்டன. இதனால் நெருக்கடி தீவிரமடைந்தது. (thoo)

 

Web Design by Srilanka Muslims Web Team