வவுனியா - வேப்பங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையம் தேசிய ரீதியில் சாதனை! - Sri Lanka Muslim

வவுனியா – வேப்பங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையம் தேசிய ரீதியில் சாதனை!

Contributors

தேசிய எரிபொருள் அட்டையை பயன்படுத்தி (QR), எரிபொருள் விநியோக நடவடிக்கையை மேற்கொண்டதில் தேசிய ரீதியில் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முதலாமிடம் பெற்றுள்ளது.

நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முகமாக தேசிய எரிபொருள் அட்டையை  எரிசக்தி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் 31 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தேசிய எரிபொருள் அட்டையை  பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களை எரிசக்தி அமைச்சு வரிசைப்படுத்திப் உள்ளது.

அதன்படி,  வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள ஜி.எச்.ஏ.டீ. சில்வா எரிபொருள் நிரப்பு நிலையம் தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தை அனுராதபுரத்தில் உள்ள டபிள்யூ.எம்.டீ.கே.உயன்வத்தை எரிபொருள் நிரப்பு நிலையமும், மூன்றாம் இடத்தை யாழ்ப்பாணம் கொக்காவில் பகுதியில் அமைந்துள்ள ஜெயபிரணவன் எரிபொருள் நிரப்பு நிலையமும் பெற்றுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team