வாகனங்களை செலுத்த பெண்களுக்கு அனுமதியளிக்கக் கோரும் போராட்டத்திற்குத் தடை! - Sri Lanka Muslim

வாகனங்களை செலுத்த பெண்களுக்கு அனுமதியளிக்கக் கோரும் போராட்டத்திற்குத் தடை!

Contributors

சவூதி அரேபியாவில், வாகனங்களை செலுத்துவதற்கு பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மன்னர் அரசு அறிவித்துள்ளது.

வாகனங்களை செலுத்துவதற்கு பெண்களுக்கு அனுமதியளிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துகின்றவர்கள் மற்றும் கலந்துகொள்கின்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னர் அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை செலுத்துவதற்கான உரிமையை பெண்களுக்கு வழங்குமாறு வலியுறுத்தி 17 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடமிருந்து கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்துக்கு முரணான நடைமுறைகளை பலவற்றைக் கொண்ட நாடு சவூதி என்பது சுட்டிக் காட்டத்தக்கது.

சவூதியில் இஸ்லாம் மனிதர்களின் உள்ளத்துக்கு கொடுக்கப் படாத நிலையில் வெறும் சட்டங்களாக  இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்துக்கு முரணான பல சட்டங்கள் திணிக்கப் படுவதாக சவூதி இஸ்லாமிய செயல்பாட்டாளர்கள் மன்னர் அரசாங்கம் மீது குற்றம் சாட்டிவருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team