வாழைச்சேனையில் சைபீரியன் கொக்கைச் சுட்டவர் கைது - Sri Lanka Muslim

வாழைச்சேனையில் சைபீரியன் கொக்கைச் சுட்டவர் கைது

Contributors

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள காவத்தைமுனைப் பகுதியில் சைபீரியன் கொக்கு ஒன்றை துப்பாக்கியினால் சுட்டதாகக் கூறப்படும் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர் சைபீரியன் கொக்கு ஒன்றை தனது சட்ட ரீதியான துப்பாக்கியினால் சுட்டு அதன் இறைச்சியை கொண்டு செல்ல முற்பட்டபோதே, சந்தேக நபரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team