வாழ்க்கை செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு! - Sri Lanka Muslim

வாழ்க்கை செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு!

Contributors

இந்நிலையில் உலகில் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பும் இடம்பெற்றுள்ளது.

லண்டனைச் சேர்ந்த பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit) என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் ஒன்றை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த தரவரிசையில் 161 வது இடத்தில் கொழும்பு இந்தியாவின் பெங்களூருவுடன் இணைந்துள்ள அதே நேரத்தில், இந்தியாவின் சென்னை, அஹமதாபாத் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி ஆகியனவும் தரவரிசையில் உள்ளன.

டமஸ்கஸ், திரிபோலி மற்றும் தெஹ்ரான் ஆகியவை மிகவும் செலவு குறைவான நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது அந்த நாடுகளின் பலவீனமான பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை பிரதிபலிக்கிறது.

அத்தோடு, 2022 ஆம் ஆண்டுக்கான உலகின் அதிக செலவு கொண்ட முதல் 10 நகரங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், சிங்கபூர் மற்றும் நியூயோர்க் நகரங்கள் உலகின் அதிக செலவு கொண்ட நகரங்களில் முதலாவது இடத்தில் உள்ள நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மூன்றாவது இடத்திலும்,ஹொங்கொங் மற்றும் லொஸ்  ஏஞ்சல்ஸ்  நகரங்கள் நான்காவது இடத்தை பிடித்துள்ளன.

அத்தோடு, சுவிட்ஸர்லாந்தின் சூரிச் 6 ஆவது இடத்திலும், ஜெனீவா 7 ஆவது இடத்தையும், சென் பிராசிஸ்கோ 8 ஆவது இடத்தையும், பாரிஸ், சிட்னி  ஆகிய நகரங்கள் 9 ஆம் மற்றும் 10 ஆம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team