விக்கி – வினோ வாய்த்தர்க்கம் அமைதிப்படுத்திய ரிசாத் - Sri Lanka Muslim

விக்கி – வினோ வாய்த்தர்க்கம் அமைதிப்படுத்திய ரிசாத்

Contributors
author image

ஊடுருவி

வடமாகாண சபைக்குரிய நிரந்தர கட்டிடத்தை மாங்குளத்தில் அமைப்பது தொடர்பில் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் கூட்டமைப்பு எம்.பி வினோநோகராதலிங்கத்திற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இம்பெற்ற முல்லைத் தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் போது இடம்பெற்றுள்ளது.

 

அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது , மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

 

அப்போது திடீர் என்று எழுந்த முல்தை;தீவு பிரதேச தமிழ் பிரமுகர் ஒருவர் – வடமாகாண சபைக்குரிய நிரந்தர கட்டிடத்தை மாங்குளத்தில் அமைப்பது தொடர்பில் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் , தென்கொரிய அரசாங்கமே இந்தக் கட்டிடத்தை நிர்மாணித்து தருவதாகவே உறுதியளித்திருந்தது. அந்தச் செயற்பாடு தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது. எது எப்படி இருந்த போதிலும் மாங்குளத்தில் அல்லது வேறு ஒரு இடத்திலாவது சபைக் கட்டிடம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

இந்தப் பதிலால் ஆத்திரம் உற்ற வினோ எம்பி – முதலமைச்சரை நோக்கி கைநீட்டியவாறாக ‘நீங்கள் அப்படி கூறமுடியாது’ மாங்குளம் என்றால் மாங்குளத்தில்தான் அமைக்க வேண்டும். இது தேர்தல் வாக்குறுதி. மக்களுக்கு நீங்கள் இவ்வாறு செய்யக் கூடாது என கடுமையாக கூறினார்.

 
இச்சந்தர்ப்பத்தில் கூடியிருந்த பொதுமக்களும் முதலமைச்சருக்கு எதிராக கருத்துக்களை கூற முற்பட்ட போது பெரும் சலசலப்பு தோன்றியது.

 

உடன் தன்னை சுதாகரித்துக் கொண்ட முதலமைச்சர் ‘அப்படி நான் கூற வரவில்லை’ என சமாளிக்க முற்பட்ட போது இன்னும் சலசலப்பு அதிகரிக்கத் தோன்றியது.

 

இச்சந்தர்ப்பத்தில் நிலைமை மோசமடைவதை அவதானித்த அமைச்சர் ரிசாத் இரு கூட்டமைப்பினரான இருவரையும் சமாதானம் செய்து அமைதிப்படுத்தியதாக அறிய முடிகின்றது.

 
இவர்களின் இந்த உள் வீட்டுக் குழப்பத்தால் முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாமை போனமை குறித்து மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வெளியேறிச் சென்றனர்  

Web Design by Srilanka Muslims Web Team