விசித்திரமான ‘கபுட்டு காக் காக் காக் -பசில்! பசில்!' வழக்கு தள்ளுபடி - பொலிஸாருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை! - Sri Lanka Muslim

விசித்திரமான ‘கபுட்டு காக் காக் காக் -பசில்! பசில்!’ வழக்கு தள்ளுபடி – பொலிஸாருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

Contributors

கடந்த 9ஆம் திகதி பல சாரதிகள் ‘கபுட்டு காக் காக் -பசில்! பசில் என்ற பாணியில் வாகனத்தை ஒலிக்கச் செய்தமை தொடர்பில் கோட்டை பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று கொழும்பு இலக்கம் 07 நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​ நீதவான் பொலிஸார் மீது அதிருப்தி தெரிவித்தார்.

உயர் அதிகாரிகளின் சட்ட உத்தரவை மட்டுமே அமல்படுத்த வேண்டும் என பொலிஸாருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது. அதன்பிறகு, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team