விமலுக்கு புதிய தலையிடி! மீண்டும் விசாரணை..! - Sri Lanka Muslim

விமலுக்கு புதிய தலையிடி! மீண்டும் விசாரணை..!

Contributors
author image

Editorial Team

அமைச்சராக செயற்பட்ட 5 வருட காலப்பகுதியில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணம் மற்றும் சொத்துக்களை முறையற்ற விதத்தில் ஈட்டிய குற்றச்சாட்டில், அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு (Wimal Weerawansa) எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி விசாரணையை ஆரம்பிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் இஸடீன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், தமது சம்பளம் மற்றும் வருமானம் மூலம் ஈட்ட முடியாத 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணம் மற்றும் சொத்துக்களுக்கு உரித்துடையவராவதன் மூலம், இலஞ்ச சட்டத்தின் மூலம் குற்றமிழைக்கப்பட்டுள்ளதாக  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team