
விமான படிக்கட்டில் தடுக்கி விழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
ஆசிய அமெரிக்க தலைவர்களை சந்தித்து பேச ஜனாதிபதி ஜோ பைடன் வொஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் அட்லாண்டா புறப்பட்டார்.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஆசிய அமெரிக்கர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக அங்குள்ள ஆசிய அமெரிக்க தலைவர்களை சந்தித்து பேச ஜனாதிபதி ஜோ பைடன் வொஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் அட்லாண்டா புறப்பட்டார்.
முன்னதாக அவர் விமான படிக்கட்டுகளில் ஏறும்போது திடீரென நிலை தடுமாறினார். எனினும் கீழே விழாமல் படிக்கட்டில் கையை வைத்து எழுந்து நின்றார்.
சமாளித்துக் கொண்டு மீண்டும் படியேற முயன்ற, 2ஆவது முறையும் தடுமாறினார். ஆனாலும் எந்த சலனமும் இன்றி மீண்டும் படிக்கட்டுகளில் தொடர்ந்து ஏற முயன்ற, 3ஆவது முறையும் தடுமாறினார். ஆனால் இம்முறை அவர் படிக்கட்டில் விழுந்தே விட்டார்.
விழுந்து, எழுந்து, பாவம்போல முழங்கால்களை தடவிக் கொண்டு, தொடர்ந்து ஏறி விமானத்தின் கதவுக்கருகே நின்று, ஒரு சல்யூட் வைத்துவிட்டு உள்ளே சென்றார்.
ஜோ பைடன் 3 முறை தடுமாறியும், 3ஆவது முறை விழுந்தும் யாரும் அவருக்கு உதவவில்லை.
இதனிடையே விமான படிக்கட்டில் ஜோ பைடன் அடுத்தடுத்து தடுக்கி விழும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதேசமயம் ஜோ பைடன் 100 சதவீதம் நலமாக இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.