விராத்துக்கு விருது கிடைக்குமா? - Sri Lanka Muslim
Contributors

ஐ.சி.சி., சார்பில் வழங்கப்படும், ரசிகர்களால் தேர்வு செய்யப்படும் “மக்களின் மனம் கவர்ந்த வீரருக்கான’ விருது இன்று அறிவிக்கப்படுகிறது. இவ்விருதுக்கு இந்திய கேப்டன் டோனி அல்லது விராத் கோஹ்லி தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்கள் அடங்கிய டெஸ்ட், ஒருநாள் அணி தேர்வு செய்யப்படும். இதுகுறித்து தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் வெளியிட்ட அறிக்கையில்,” ஐ.சி.சி., சார்பிலான 2013ல் சிறந்த டெஸ்ட், ஒருநாள் வீரர்கள் அணிகளில் இடம் பெற்ற வீரர்கள் விவரங்கள் இன்று வெளியிடப்படும். தவிர, ரசிகர்கள் “ஆன்-லைன்’ மூலம் தேர்வு செய்த, “மக்களின் மனம் கவர்ந்த வீரர்’ யார் என்பதும் இன்று தெரியும்,’ என, தெரிவித்துள்ளது.

விராத் போட்டி: நடப்பு ஆண்டின் “மக்களின் மனம் கவர்ந்த வீரர்’ விருதுக்கான போட்டியில், இந்தியாவில் இருந்து கேப்டன் தோனி, விராத் கோஹ்லி, ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், இங்கிலாந்தின் அலெஸ்டர் குக், தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் என. ஐந்து பேர் உள்ளனர். உலகிலுள்ள ரசிகர்கள் ஓட்டுப் பதிவின் மூலம், இதில் ஒருவர் இன்று தேர்வு செய்யப்படுகிறார்.

Web Design by Srilanka Muslims Web Team