விருதுக்கு தெரிவாகியுள்ள 02 எழுத்தாளர்களின் புத்தகங்கள் » Sri Lanka Muslim

விருதுக்கு தெரிவாகியுள்ள 02 எழுத்தாளர்களின் புத்தகங்கள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-மேமன்கவி-


கொடகே 2016 ஆண்டுக்கான ஆக்க இலக்கிய கையழுத்துப்பிரதி போட்டி விருது வழங்கும் விழா எதிர்வரும் 22.02.2017 அன்று பி.ப.3.30 மணிக்கு கொழும்பு-7 தேசிய நூலக சேவை ஆவணவாக்கல் சபை கேட்போர்க் கூடத்தில் நடைபெறும்.

இவ்விழாவில் சிங்கள- தமிழ் மொழிகளில் எழுதப்பட்ட சிறந்த ஆக்க இலக்கிய கையெழுத்துப் பிரதிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்,

இவ்விழாவில் சிங்கள மொழியில் பேராசிரியர் பீ.ஏ.டெனிசன் பெரேரா அவர்களும், தமிழில் மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் அவர்களும் உரைகள் நிகழ்த்துவார்கள்.

சிறந்த தமிழ்க் கவிதைத் தொகுப்பு கையெழுத்துப் பிரதிக்கான விருதினை தனது ””மழை நின்ற பொழுதும்…. “ எனும் பிரதிக்கு காத்தநகர் முகைதீன் சாலியும், சிறந்த சிறுகதைத் தொகுப்பு கையெழுத்துப் பிரதிக்கான விருதினை தனது ” ”அமேசன் காட்டில் அழகன் பூசாரி“ எனும் பிரதிக்கு அ..இருதயநாதன் பெற்றுக் கொள்வார்கள்.
bo bo.jpg6

Web Design by The Design Lanka