விரைவில் அமைச்சரவை மாற்றம்? - Sri Lanka Muslim
Contributors

விளையாட்டு, துறைமுகங்கள், தொழில், நெடுஞ்சாலைகள், சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் அடுத்த சில நாட்களில் அமைச்சுப்  பதவி மாற்றங்கள்  ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திசாநாயக்க, குமார வெல்கம மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ள அதேவேளை, பல புதிய இராஜாங்க அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேற்படி அமைச்சுக்களை தற்போது வகிக்கும் கெஹலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு ஏனைய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பான விவாதங்கள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Web Design by Srilanka Muslims Web Team