விழிப்புலனற்றோர் அமைப்பின் கிழக்கு மாகாணக் காரியாலயம் அட்டாளைச்சேனையில் திறந்துவைப்பு! - Sri Lanka Muslim

விழிப்புலனற்றோர் அமைப்பின் கிழக்கு மாகாணக் காரியாலயம் அட்டாளைச்சேனையில் திறந்துவைப்பு!

Contributors

கிழக்கு மாகாண விழிப்புலனற்றோர் அமைப்பின் மாகாண காரியாலய திறப்பு விழாவும், கௌரவிப்பு வைபவமும் அட்டாளைச்சேனையில் திங்கட்கிழமை (17) நடைபெற்றது.

விழிப்புலனற்றோர் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் ஏ.எம். அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம். நளீல், அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ். ஜுனைடீன் ஆகியோர் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக இக் காரியாலயம் இயங்குமென தலைவர் ஏ.எம். அப்துல் சலாம் தெரிவித்தார்.

விழிப்புலனற்றவர்கள் சுயமாக நடமாடக் கூடிய வகையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிஜிடல் வெள்ளைப் பிரம்பை வழங்குவதற்கும், அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ் அலுவலக திறப்பு விழாவில் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஜீ. அர்சாத், அம்பாறை மாவட்ட அரச நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ.எல்.எம். இர்பான், சிரேஷ்ட உள வள துணை ஆலோசகர் ஏ. மனூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team