விவியன் ரிச்சர்ட்ஸின் நினைவுச் சின்னம் சூறையாடல் - Sri Lanka Muslim

விவியன் ரிச்சர்ட்ஸின் நினைவுச் சின்னம் சூறையாடல்

Contributors

கிரிக்கெட் உலக ஜாம்பவான்களில் ஒருவரான விவியன் ரிச்சர்ட்ஸின் நினைவுச் சின்னம் சூறையாடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலக ஜாம்பவான்களில் ஒருவரும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் அணித்தலைவருமானவர் விவியன் ரிச்சட்ஸ்.

இவரது வீடு உள்ள செயின்ட் ஜான்ஸில் தெருவில் நினைவுச் சின்னம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

இதனை விஷமிகள் சிலர் சூறையாடி உள்ளனர்.

இதற்கு ஆண்டிகுவா- பார்புடா கிரிக்கெட் சங்கத் தலைவர் சோரோல் பார்த்லே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இது தேசிய அவமானம், வருத்தத்திற்குறிய செயல்.

தேசியப் பெருமையின் முக்கியத்துவத்தை உணராதவர்கள் செய்த செயல் இது.

இதற்காக நான் அவமானப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது சேதமடைந்த இந்த சிலையை பழுது பார்க்க எடுத்து சென்றுள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team