விஸ்வரூபம் எடுக்கிறது உலகத் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்! - அமெரிக்கா அதிர்ச்சி. - Sri Lanka Muslim

விஸ்வரூபம் எடுக்கிறது உலகத் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்! – அமெரிக்கா அதிர்ச்சி.

Contributors

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட தலைவர்களின் தொலைபேசி பேச்சுக்களை ஓட்டு கேட்ட அமெரிக்காவின் செயல் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக நாடுகளின் தலைவர்கள் பேச்சை ஒட்டு கேட்பதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியை சேர்ந்த ஸ்னோடென் ரகசியத்தை வெளியிட்டார். இதனையடுத்து அவருக்கு ரஷ்யா ஆதரவு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவி்த்த அமெரிக்கா மறுப்பு தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி ரஷ்யாவிடம் வலியுறுத்தியது.

இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் அதிபர் ஆகியோரின் டெலிபோன்கள் பேச்சுகள் ஒட்டுகேட்டதை ஆதாரத்துடன் நிருபி்க்கப்பட்டதையடுத்து செய்த தவறை மறுக்கவில்லை. அதற்கு பதிலாக எதிர்காலத்தில் இது போல் நடக்காது என்று மட்டுமே கூறியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரையி்ல் 35 நாடுகளை சேர்ந்த 200 டெலிபோன் உரையாடல்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் மூலம் ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஒட்டு கேட்கும் பணியை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு தேவையான ஆவணங்கள் மற்றும் உரையாடல்களை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பிவைக்கிறது. மேலும் இத்தகவல்களை வெள்ளை மாளிகை, பெண்டகன் உட்பட பல்வேறு துறைகள் பகிர்ந்து கொள்வதாகவும் கார்டியன் பத்திரிகையின் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team