வீடுகள் இடிப்பு: நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு - Sri Lanka Muslim

வீடுகள் இடிப்பு: நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

Contributors

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள தமிழ் மக்களின் வீடுகள் இடித்தழிக்கப்பட்டு வருவதை உடன் நிறுத்துமாறு யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற   உறுப்பினரும் இரா. சம்பந்தன்  யாழ்ப்பான பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

தனக்கும் ஜனாதிபதிக்கும் வியாழனன்று தொலைபேசி ஊடாக நடைபெற்ற பேச்சையடுத்தே ஜனாதிபதி மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்  பேச்சின்போது ஜனாதிபதியிடம் நான் கோரிக்கை விடுத்தேன். இந்த உரையாடலையடுத்து, சில நிமிடங்களுக்குப் பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தொலைபேசி ஊடாக என்னைத் தொடர்புகொண்டார்.

“வீடுகள் இடிக்கப்படுவதாக நீங்கள் கூறிய விடயம் குறித்து ஜனாதிபதி யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடினார். குறித்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார். இதன் பின்னரும் வீடுகள் இடிக்கப்பட்டால் ஜனாதிபதியிடம் நீங்கள் முறையிடலாம்” என்று லலித் வீரதுங்க என்னிடம் தெரிவித்தார். என்று தெரிவித்துள்ள்ளார்

Web Design by Srilanka Muslims Web Team