வீண் விரயமும், பெருமையும் - Sri Lanka Muslim
Contributors

-மிஹ்ழார் முகம்மட்-

 

உணவு, குடிநீர், ஆடை, வருமானம் ஆகியவை இல்லாமல், வறுமை கோட்டுக்குக் கீழ் எத்தனையோ ஏழைகளும், நலிந்தவர்களும் வாழும் இப்புவியில், ஆடம்பரக்காரர்கள்செய்யும் வீண் செலவுகளை, ஏழைகளுக்கும், நலிந்தவர்களுக்கும் செய்தால், அவர்களுக்கு புண்ணியமாவது கிடைக்கும். மேலும் வறுமையில் வாடுபவர்களுக்கு மறுவாழ்வும் கிடைக்கும்.

 

 

ஆடம்பரத்திற்காக வீண் விரயம் செய்பவர்களை இறைவன் ஒருபோதும் நேசிப்பது கிடையாது.

 

 

“உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”.-அல்குர்ஆன் (7: 31)

 

 

“பெருமையும், வீண்விரயமும் அமையாத வரைக்கும் உணவையும், குடிப்பையும் அல்லாஹ் ஆகுமானதாக ஆக்கியுள்ளான்”.அறிவிப்பாளர் : ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரளி),

 

 

அல்ஹதீஸ், நூல் இப்னுஜரீர்

 

“வீண் விரயமும், பெருமையும் இல்லாமல் நீங்கள் உண்ணுங்கள், பருகுங்கள், அணியுங்கள், தானதர்மம் செய்யுங்கள். ஏனெனில், அல்லாஹ் ஓர் அடியானுக்கு அளித்த வெகுமதியை அடியானிடமிருந்து அவன் காணும்போது மகிழ்ச்சி அடைகிறான்”.
– (நூல் : அஹ்மது)

Web Design by Srilanka Muslims Web Team