வெடி குண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மஹால்

Read Time:1 Minute, 51 Second

வெடி குண்டு அச்சுறுத்தலின் பின்னர் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முகலாய காலத்தின் நினைவுச் சின்னமான தாஜ்மஹால் வியாழக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்தியாவின், ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் வளாகத்திற்குள் வெடி குண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தின் பின்னர் வெடிக்கும் என்று உத்தரபிரதேச காவல்துறைக்கு கிடைக்கப் பெற்ற அடையாளம் தெரியாத நபரின் தகவலின் பின்னர் தாஜ்மஹால் மூடப்பட்டதுன், அங்கிருந்த ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளையும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டது.

அதன் பின்னர் காவல்துறையினர் பாதுகாப்பு அமைப்பு குழுக்களுடன் சென்று தாஜ்மஹால் வளாகம் முழுவதும் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எனினும் அவ்வாறன எந்த வெடி பொருள் சாதனங்களும் இதன்போது மீட்கப்படாத நிலையில் தாஜ்மஹாலின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட்டு, நினைவுச் சின்னம் மீண்டும் காலை 11.15 மணியளவில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து விடப்பட்டது.

காவல்துறையினருக்கு வந்த போலியான வெடி குண்டு அச்சுறுத்தல் தொடர்பான அழைப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Previous post கல்முனை மேயரின் மகனின் அடாவடி, தாக்குதலுக்குள்ளான மொட்டுக் கட்சி செற்பாட்டாளர் வைத்தியசாலையில்..!
Next post இந்திய உயர்ஸ்தானிகருக்கு இலங்கையில் தடுப்பூசி..!