வெற்றிச் சின்னம் காண்பித்த கால்பந்து வீரர் நீக்கம்! - Sri Lanka Muslim

வெற்றிச் சின்னம் காண்பித்த கால்பந்து வீரர் நீக்கம்!

Contributors

கோல் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமியவாதிகளை ஆதரிக்கும் வெற்றிச் சின்னத்தை கையால் காண்பித்த ஸ்ட்ரைக்கர் அஹ்மது அப்துல் ஸாஹிரை எகிப்திய கால்பந்து க்ளப் நீக்கம் செய்துள்ளது.

ராணுவ சதிப்புரட்சி மூலம் நீக்கம் செய்யப்பட்ட எகிப்தின் முதல் ஜனநாயக அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆதரவாளர்கள் போராட்டத்தின் போது காட்டுவது போல தனது நான்கு விரல்களையும் உயர்த்திக் காட்டியதால் ஸாஹிர் நீக்கம் செய்யப்பட்டதாக எகிப்தின் பிரபல கால்பந்து கிளப்பான அல் அஹ்லியின் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏ.பி. கூறுகிறது.

கெய்ரோவில் நடந்த ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் அல் அஹ்லிக்காக ஆடிய ஸாஹிர், கோல் அடித்தவுடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நான்கு விரல்களை உயர்த்திக் காட்டினார்.

அடுத்த மாதம் மொராக்கோவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் ஸாஹிர் இழக்கிறார். விளையாட்டில் அரசியலை கலக்க அனுமதிக்க மாட்டோம் என்று க்ளப்பின் போர்ட் உறுப்பினர் கூறுகிறார்.

நான்கு விரலை காட்டும் டீ ஷர்ட்டை அணிந்ததற்காக எகிப்தின் குங்க்ஃபூ வீரர் முஹம்மது யூசுஃப் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டார்.

Web Design by Srilanka Muslims Web Team