வெற்றி தோல்வியற்ற முடிவை நோக்கி நியூசிலாந்து - பங்களாதேஷ் - Sri Lanka Muslim

வெற்றி தோல்வியற்ற முடிவை நோக்கி நியூசிலாந்து – பங்களாதேஷ்

Contributors

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், பங்களாதேஷ் அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாள் முடிவில் இரு அணிகளும் வெற்றியைப் பெறும் வாய்ப்பினைக் கொண்டுள்ளன. ஆனால் போட்டியின் முடிவு வெற்றி தோல்வியற்றுப் பெறப்படும் வாய்ப்பே அதிகமாகக் காணப்படுகிறது.

7 விக்கெட்டுக்களை இழந்து 380 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 501 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 9ஆவது விக்கெட்டுக்காக 105 ஓட்டங்கள் பகிரப்பட்டிருந்தன.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக மொமினுல் ஹக் 181 ஓட்டங்களையும், சொஹக் கஷி ஆட்டமிழக்காமல் 101 முஷ்பிக்கூர் ரஹீம் 67 ஓட்டங்களையும், நசீர் ஹொசைன் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக டக் பிரேஸ்வெல் 3 விக்கெட்டுக்களையும், கொரே அன்டர்சன், ட்ரென்ட் போல்ட்ற், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், கேன் வில்லியம்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
32 ஓட்டங்கள் பின்னிலையில் காணப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி, மழை காரணமாலக இன்றைய நாள் ஆட்டம் நிறுத்தப்படும் போது ஒரு விக்கெட்டை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
துடுப்பாட்டத்தில் பீற்றர் ஃபுல்ற்றன் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும், ஹேமிஸ் றதர்ஃபோர்ட் 32 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் நசீர் ஹொசைன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.
சிட்டகொங்கில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலாவதாகத் துடுப்பெடுத்தாடி 469 ஓட்டங்களைக் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team