வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மனைவிக்கு பிணை » Sri Lanka Muslim

வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மனைவிக்கு பிணை

Contributors

(NF)

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் கைதான வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மனைவி இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மனைவிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சந்தேகநபர்களின் விளக்கமறியல் உத்தரவு இம்மாதம் 28 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team