வெளிநாட்டு அழுத்தங்களுடன் ஆட்சியை கைப்பற்றும் ஐ.தே.க.வின் கனவு பலிக்காது - Sri Lanka Muslim

வெளிநாட்டு அழுத்தங்களுடன் ஆட்சியை கைப்பற்றும் ஐ.தே.க.வின் கனவு பலிக்காது

Contributors

வெளிநாட்டு அழுத்தங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டைத் துண்டாடும் பகல் கனவிலேயே ஐக்கிய தேசியக் கட்சியினர் மிதப்பதாக அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அடுத்த வருடமே தேர்தல் நடக்கப்போவதாகவும் அதில் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமெனவும் எண்ணிக் கொண்டு அக்கட்சி செயற்படுவதாகத் தெரிவித்த அமைச்சர்: மக்கள் ஆதரவு அரசாங்கத்துக்கே உள்ளதென்பதை அக்கட்சி மறந்துவிட்டதெனவும் தெரிவித்தார்.

புலிகளுக்கு நாட்டை தாரை வார்க்கத் துணிந்த ஐக்கிய தேசியக் கட்சி வெளிநாட்டு அழுத்தங் களுடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி தமது எண்ணத்தை நிறைவேற்றக் காத்திருப்பதாகத் தெரிவித்த அமைச்சர்; அத்தகைய சிந்தனையில் செயற்படுபவர்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் சிறப்பு ஒருபோதும் விளங்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

அரசாங்கம் அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் நாட்டைக் கட்டியெழுப்பும் பாரிய செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. 14,000 கிராமங்களை இலக்காகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘திவிநெகும’ வாழ்வெழுச்சித் திட்டம் வறுமையை ஒழிப்பதிலும் தேசிய உற்பத்தியிலும் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபிவிருத்தி பற்றி பேசும்போது; மேல் கொத்மலை, நுரைச்சோலை போன்ற மின்சார உற்பத்தித் திட்டங்கள் ஐ. தே. க. காலத்திலேயே மிகக் குறைந்த செலவில் மேற்கொண்டிருக்க வேண்டிய திட்டங்களாகும். அந்த அரசாங்கம் அதனைச் செய்யாததால் தற்போது எமது அரசாங்கம் பெரும் நிதி செலவில் இத்திட்டங்களை மேற்கொள்ள நேர்ந்தது.

இதன் மூலம் தற்போது தினமும் 300 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிவதுடன் மின்சார சபையின் நட்டத்தையும் ஈடுசெய்ய முடிந் துள்ளது.அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து குரலெழுப்பும் ஐ.தே.க. அதன் ஆட்சிக் காலத்தில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை ஆறு இலட்சமாகக் குறைக்க நடவடிக்கை எடுத்தது.

எனினும் எமது அரசாங்கமே அரச ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளத் தொகையை 11,000 ஆயிரமாக அதிக ரித்தது. நகர்ப்புற வீடமைப்புத் திட்டத்தின் மூலம் 50,000 வீடுகளையும் தோட்ட வீடமைப்புத் திட்டத்தின் மூலம் 50,000 வீடுகளையும் அரசாங்கம் நிர்மாணித்து வருகிறது. ஐ. தே. க. ஆட்சிக் காலத்தில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டதா என நான் கேட்க விரும்புகிறேன்.

Web Design by Srilanka Muslims Web Team