வெளிநாட்டு ஊடகவியலாளர்களை ஸ்ரீ கொத்தாவிற்கு அழைத்துச் சென்றமை தேசத்துரோகம் - காமினி - Sri Lanka Muslim

வெளிநாட்டு ஊடகவியலாளர்களை ஸ்ரீ கொத்தாவிற்கு அழைத்துச் சென்றமை தேசத்துரோகம் – காமினி

Contributors

சனல் 4 ஊடகவியலாளர்களை ஐ.தே. கட்சி தலைமையிலான ஸ்ரீ கொத்தாவிற்கு கொண்டு
வந்தமையானது தேசத்துரோக செயலாகும் என தொழில் அமைச்சர் காமினி லொக்குகே சபையில் தெரிவித்தார் .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அரசியல் சுதந்திரம் ஜனாதிபதியினாலேயே இன்று கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார் .
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அமைச்சர் காமினி லொக்குகே இதனைத் தெரிவித்தார் .
சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ஐ.தே. கட்சித் தலைவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரை பயங்கரவாதிகளால் அங்கவீனமாக்கப்பட்ட உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களை ஸ்ரீ கொத்தாவிற்கு கொண்டு வந்து சனல் 4 ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கவிருந்தது .
ஆனால் , ஐ.தே. கட்சி சனல் 4 ஊடகவியலாளர்களுக்கு இலங்கைக்கு எதிரான தகவல்களை வழங்குவதற்கு ஸ்ரீ கொத்தாவிற்கு அழைத்து வரப்பட்டனர் . இதன் மூலம் நாட்டுக்கு தேசத்துரோகம் செய்துள்ளனர் .(tn)

Web Design by Srilanka Muslims Web Team