வெளிநாட்டு முஸ்லிம்கள் இலங்­கை­யில் விவாகப் பதிவு செய்யத்தடை - Sri Lanka Muslim

வெளிநாட்டு முஸ்லிம்கள் இலங்­கை­யில் விவாகப் பதிவு செய்யத்தடை

Contributors

முஸ்லிம் விவாக சட்டத்தின் கீழ் இலங்கையில் வதியும் முஸ்லிம்களின் விவாகங்களை மாத்திரமே பதிவு செய்ய முடியும். வெளிநாட்டு இஸ்லாமியர்களின் விவாகத்தைப் பதிவு செய்ய முடியாது. எனவே முஸ்லிம் விவாக பதிவாளர்கள் வெளிநாட்டு முஸ்லிம்களின் விவாகத்தைப் பதிவு செய்வதிலிருந்து முழுமையாகத் தவிர்ந்து கொள்ள வேண்டுமென பதிவாளர் நாயகம் எம். எம். குணசேகர அனைத்து முஸ்லிம் விவாக பதிவாளர்களையும் சுற்று நிருபம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட சுற்று நிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-
மணமகளும் மணமகனும் இலங்கை முஸ்லிம்களாக இருந்தால் மாத்திரமே முஸ்லிம் விவாக பதிவினை மேற்கொள்ள முடியும். இருவரும் முஸ்லிம்களாக இருக்கும் போது பொது விவாக சட்டம் மற்றும் கண்டிய விவாக சடத்தின் கீழ் பதிவு செய்து கொள்ள முடியாது.
இரு தரப்பினரில் ஒருவர் மாத்திரம் முஸ்லிமாக இருந்தால் அந்த விவாகப் பதிவு பொது விவாக சட்டத்தின் கீழேயே பதிவு செய்யப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.(v)

Web Design by Srilanka Muslims Web Team