வெளிநாட்டு மென்பானங்களுக்கு வடக்கில் தடை - Sri Lanka Muslim

வெளிநாட்டு மென்பானங்களுக்கு வடக்கில் தடை

Contributors

(TCNN)

வெளிநாட்டு மென்பானங்களை வட மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ பயன்படுத்தக் கூடாதெனவும் அதற்குப் பதிலாக உள்ளூர் பழரசங்களையே பயன்படுத்த வேண்டும் எனவும் வட மாகாண விவசாய, கமலநலசேவை, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, சுற்றாடல் துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ். புரூடி வீதியிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் நேற்றைய தினம் தனது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட பின்னர் அலுவலகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

இவ்வாறான வெளிநாட்டு மென்பானங்களை அருந்துவதால் உடல்நலக் குறைவு ஏற்படுவதோடு, சிறந்த உள்ளூர் பழரசங்கள் ஒதுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Web Design by Srilanka Muslims Web Team