வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் பகுதிக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் விஜயம்! - Sri Lanka Muslim

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மன்னார் பகுதிக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் விஜயம்!

Contributors

நாட்டில் ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு, மக்கள் காங்கிரஸின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் விஜயம் மேற்கொண்டார்.
மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார், பியர், புதுக்குடியிருப்பு, தாராபுரம் மற்றும் தாழ்வுபாடு ஆகிய பிரதேசங்களில் கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்.
மேலும், குறித்த பிரதேசங்களில் வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான தற்காலிக வடிகான் வசதிகளையும் அவர் மேற்கொண்டிருந்தார்.

Web Design by Srilanka Muslims Web Team