வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆர்.ஜே.மீடியா உதவிக்கரம்! - Sri Lanka Muslim

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆர்.ஜே.மீடியா உதவிக்கரம்!

Contributors

அண்மைக்காலத்தில் சீரற்ற காலநிலையினால் நாட்டில் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக, பெரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்குள்ளான நாவலப்பிட்டி மக்களுக்கு உதவித்தொகை வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் நாவலப்பிட்டி லபுவல்கோடுவவில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் ஆர்.ஜே.மீடியாவின் பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏம்.எம்.இன்ஸாப், பிரதிப் பணிப்பாளரும் அறிவிப்பாளருமான பாபு ஜனுராஜ், உப செயலாளரும் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான பாத்திமா ஆதிரா ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகக் கண்ணுற்று அவர்களுக்கான உதவித் தொகையினை நாவலப்பிட்டி லபுவல்கோடுவவில் அமையப் பெற்றுள்ள மஸ்ஜிதுல் முகர்ரமாவின் செயலாளர் றிழ்வானிடம் வழங்கி வைத்தனர். இதன் போது பள்ளி நிருவாகிகள் பலரும் சமுகமளித்திருந்தனர்.

ஆர்.ஜே.மீடியாவினால் முன்னெடுக்கப்பட்ட, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையிலான இந்த வேலைத்திட்டத்தில் பொதுமக்கள் பலரும் பங்கேற்று உதவிகளை வழங்கியிருந்தனர்.

உதவிக்கரம் நீட்டும் இச் செயற்றிட்டத்தில் பங்குதாரர்களாகி பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி மக்களுக்கு உதவ முன்வந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் ஆர்.ஜே.மீடியா நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மேலும், ஆர்.ஜே. மீடியாவானது சமூகத்திற்கு மத்தியில் கல்வி, சமூக, துறைசார் சேவைகளை முன்னெடுத்து வருவதோடு, இன்னும் பல சேவைகளை வழங்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team