வெள்ள அணர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க முன்கூட்டி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்பு- அமைச்சர் றிசாட் பதயுதீன் - Sri Lanka Muslim

வெள்ள அணர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க முன்கூட்டி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்பு- அமைச்சர் றிசாட் பதயுதீன்

Contributors

தற்போது வடக்கின் பல்வேறு பிரதேசங்களில் பெய்துவரும் மழையினையடுத்து தாழ்ந்த பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் வெள்ள அச்சுறுத்தல்களை எதிர் நோக்க நேரிட்டால் அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுக்குமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் மாவட்ட அரசாங்க அதிபர்கள்,மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டின் பல பாகங்களிலும் கடுமையான மழை,மற்றும் கடும் காற்று வீசுவதாலும்,கால நிலை அவதான நிலையம் வெளியிட்டுவரும் எதிர்வு கூறல் தொடர்பிலும் பிரதேச மக்களை அறிவுறுத்துமாறும்,மக்களை அவதானமாக இருக்குமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தொடர்பி்ல் நினைவுபடுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்.எதிர்காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்களிலிருந்து மக்களை பாதுகாக்க முன் கூட்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் கேட்டுள்ளார்.

தறடபோதைய நிலை தொடர்பில் உடன் விபரங்களை தமக்கு எவ்வித தாமதமுமின்றி சமர்பிக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் ,வவுனியா,முல்லைத்தீவு,மன்னார் அரசாங்க அதிபர்கள்,மற்றும் பிரதேச செயலாளர்கள்,அனர்த்த முகாமைத்துவ மையத்தின் அதிகாரிகளையும் கேட்டுள்ளார்.

போதுமான தரவுகளை கிராம ரீதியில் பெற்றுக் கொள்ள கிராம அதிகாரியுடன் இணைந்து புதிதாக நியமனம் பெற்றுள்ள பட்டதாரிகள்,மற்றுமு் சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளையும் ஈடுபடுத்துமாறு  அமைச்சரும ,மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான றிசாத் பதியுதீன் மேலும் அரசாங்க அதிபர்,மற்றும் பிரதேச செயலாளரிடம் கேட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team